பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டின் இயற்கையும் அதன் பாட்டியற்றிறனும் கோர் இனி, இங்கு ஆராய்தற் பொருட்டு எடுத்துக் கொண்ட முல்லைப்பாட்டில் "தன் மனையாளைப் பிரிந்து பகை வேந்தரொடு போர்செய்யப் போவானொருக லைவன் தான் பிரிவுதனை அவளுக்கு நயமாக உணர்த்திக் காலத் தொடக்கத்தில் வருவேன், அதுகாறும் நீ ஆற்றி யிரு என்று சொல்லிப்பிரிய, அச்சொல்வழியே ஆற்றி யிருந்தவள், அவன் சொன்ன கார் காலம் வரக்கண்டும் அவன் வந்திலாமையிற் பெரிதும் ஆற்றாளாயினள்; பின் னர்ப் பெருமுதுபெண்டிர் பலவகையால் ஆற்றுவிக்கவும் ஆற்றாதவன் (இங்கனம் ஆற்றாது வருந்துதல் கணவன் கற்பித்த சொல்லைத் தவறியதாய் முடியுமாதலால், அவர் வருங்காறும் ஆற்றுதலே செயற்பாலது' என்று உட் கொண்டு பொறுமையுடன் இருந்த தலைவி யிடத்துச், சென்ற தலைவன் மீண்டுவந்தமை" ஆகிய அகப்பொருள் இருப்புச்சொல்லப்பட்டமையால், இப்பாட்டின் கட்டலை மகன் தலைமகள் சிறப்புப்பெயர் இன்னவென்று எடுத்துச் சொல்லப்படவில்லை. இங்ஙனந் தலைமகன் தலைமகளைப் பிரியும்போது ஆற்றுவித்துப் போதலும், போனபின் அவன் வினைமுடித்து வருந்துணையும் அவள் ஆற்றியிருத் தலும் இங்குச்சொல்லப்பட்ட தலைமக்களுக்கே யன்றி எல்லார்க்கும் உரியனவாகையால் ஆசிரியர் நப்பூதனார் அவர் பெயர் இங்கெடுத்துச் சொல்லாமை பற்றி வரக் கடவதோர் இழுக்கு ஒன்றுமில்லையென்றுணர்க.