பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை 11* இனி, முல்லை என்னும் அக வொழுக்கத்தோடு இயைபுடைய புறலொழுக்கம் வஞ்சி என்பதாம்; "வஞ்சி தானே முல்லை புறனே என்றார் ஆசிரியர் தொல் காப்பியனாடும். வஞ்சி என்பது ஓர் அரசன் வேற்றோர் அரசன் நாடு கைப்பற்றுதற்பொருட்டுப் படையெடுத்துச் செல்வது, வஞ்சித்திணை முல்லைத்திணைக்குப் புறனான வாறு யாங்ஙனமெனின்; மனைவி தன் காதலனைப் பிரிந்து மனையீன் கண் இருப்பதுபோல, அவள் கணவனும் அவ ளைப்பிரிந்து பாடிவீட்டின் கண் இருப்பன் ஆகலானும், தலைமகள் வீடு காட்டின் கண் இருப்பதுபோலப் பாடி வீடும் பகைவர்நகர்க்கு அரணான காட்டின்கண் அமைக் கப்படும் ஆகலானும் முல்லையும் வஞ்சியுந் தம்முள் இயைபு உடைய ஆயின என்க. இனி, நப்பூதனார் என்னும் நல்லிசைப் புலவர் 'முல்லை' என்னும் அகவொழுக்கத்தினை விரித்துச் செய் யுள் இயற்றுகின்றார் ஆகலின், அதனோடு இயைபுடைய வஞ்சி யொழுக்கத்தை அரசன் பகைமேற் சென்று பா சறையிலிருக்கும் இருப்புக் கூறுமுகத்தால் இதன் கண் அமைத்துக் கூறுகின்றார். இவ்வாறு தாம் எடுத்துக் கொண்ட பொருளுக்கு மாறுபடாமல் இவ்வாசிரியர் வேறுபொருளை இதன்கட்பொருத்தி உரைக்கும் நுணுக் கம் மிகவும் வியக்கற்பால தொன்றாம். இன்னுந், தாங் கூறல்வேண்டும் முதன்மையான ஒரு பொருளைப் பொறுக்கான சொற்றொகுதியினால். எடுத்துக் கோவையாகத் திரித்து நூற்றுக்கொண்டு செல் லும்போது, அப்பொருளின் இடையே அதனோடு இயை தொல்காப்பியம்,பொருள், சுக..