பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூஉ முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை இவ்வாறு இப்பாட்டின்கண் முல்லைப்பொருள் இடையறுந்து நிற்கும் இடுக்குவெளி யாதோவெனிற் கூறுதும்; தலைமகன் கூறிய கார்காலம் வருதலை உணர்ந்து ஆற்றாமல் அழுது வருந்தும் நங்கைக்கு நற்சொற்கேட்டு வந்த பெருமுது பெண்டிர்? நாங்களும்படைத் தலை வருங்கேட்ட நற்சொல்லால் நின் காதலன் தான் எடுத் துப்போன போர்வினையை விரைவில் முடித்துத் திரும்பி நின்னுடன் வந்து சேர்வன்; அவன் வரும் வரையில் நீ ஆற்றிக்கொண்டு இருத்தல் வேண்டும்." என்று பலகா லுஞ் சொல்லி வற்புறுத்தவும் வற்புறுத்தவும், அவள் அவர் சொற்களைக் கேளானாய், மைதீட்டிய பூப்போன்ற கண்ணினின்றும் நீர் முத்துப்போல் துளித் துளியாய் விழக் கலுழ்ந்து வருந்தினாள் என உங-வது வரியில் முல்லைப்பொருள் முற்றும் முடிவுபெறாமல் இடையறுந்து நிற்பதுகாண்க. இப்பாட்டினைக் கற்போர் இவ்வளவில் தாங்கற்பதை நிறுத்திவிடாமல், இங்ஙனம் வருந்திய அப் பெண்மணி பின் எவ்வாறு ஆயினாள் எனப் பின்னும் அறிவதற்கு மிக விழைகுவர்; இங்ஙனம் அவர் முடிவறி யும் விழைவால் மேலுங்கற்பதற்கு மனவெழுச்சி மிகுந்து நிற்கும் பொழுது பிறபொருள் இடையே இணைத்துச் சொல்லப்படுமாயினும் அதனால் அவர் தாம் சிறிதும் இளைப்படையாது, அவ்விடைப்பட்ட பொருளையுங் கற்று மேற்சென்று பொருள்முடிவு காண்பரென்பது தெற்றென விளங்கும். ஆகவே, இங்கனம் முல்லைப் பொருள் இடையறுந்து நிற்கும் இடங்கண்டு அங்கே முல்லைப்பொருளை மறித்து, அதனோடு இயைபுடைய வஞ் சிப்பொருளைக் கொணர்ந்து நுழைத்துப், பின் மறிக்கப் பட்ட முல்லைப் பொருளை அ0-வது வரியிலே "இன்