பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டின் வரலாறு கூகூ செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப் புலம்பொடு வதியும் நலங்கிளர் அரிவை" என்று கூறுதலொடு நப்பூதனார் கூறுவதையும் ஒப்பிட்டு உணர்ந்துகொள்க. வாடைக்காலத்தும் வேனிற்காலத்தும் அரசர்கள் போர்மேற்சென்று பாசறைக்கண் இருப்பது பண்டைக் காலத் தமிழ்நாட்டு வழக்காம் என்று ஆசிரியர் தொல் காப்பியனார் கூறுதலின் வேனிற்காலத்துப் போர்மேற் சென்றதலைவன் திரும்பி மனையாள்பால் வந்துசேர்தற் குரிய கார்காலத் துவக்கத்திலே பிரிவாற்றியிருந்த தலை வியின் முல்லையொழுக்கத்தைப் பொருளாகவைத்து நப் பூதனார் இம் முல்லைப்பாட் டியற்றினார். திரும்பவுங் கூதிர்காலத் துவக்கத்திலே நெடுஞ்செழியன் தன் மனை யாளைப் பிரிந்து போர்மேற் செல்லத்,தலைமகள் பிரிவாற் றாது வருந்திய பாலை யென்னும் அகப்பொருள் ஒழுக்கத் தைப் பொருளாகலைத்து நக்கீரனார் நெடுநல்வாடை இயற்றினாரென்று பகுத்தறிந்துகொள்க. வேனிற்காலத் திற் பெரும்போர்துவங்கி நடைபெறுகையில் வேனில கழிந்து கார்காலந் தோன்றியதாக இருபடை மக்களும் அக்காலங் கழியுந்துணையும் போர்விட்டிருந்து, மறித்துர் கூதிர்காலத் தொடக்கத்திலே போர் துவங்குவராகலின், அக்காலத்திலே அரசர் தம்மனைக்கு மீண்டுவந்து தங்கிப் பின்னருங் கூதிர்காலத்திலே போரைநச்சிப் போவது வழக்கமாகும் என்க. இனி, நெடுஞ்செழியன் தமிழில் வல்லவன், சிறந்த கொடையாளி, அஞ்சாத போராண்மை வாய்ந்தவன் என்

  • "கூதிர் வேனில் என்றிரு பாசறைக்

காதலின் ஒன்றிக் கண்ணியமாபினும் - புறத்திணையியல்,உக. லையடிகள் நூல்