பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை பது புறநானூற்றில் அவன் பாடிய "நகுதக்கனரே" என்னுஞ்செய்யுளால் இனிதுவிளங்கலானும், தமிழ்ப்புல வர் பலரைச் சேர்த்துவைத்துத் தமிழை வளம்படுத்து வந்தான் என்பது மதுரைக்காஞ்சி முதலியவற்றால் தெரிதலானும் இவனையும் இவன் கற்புடைமனைவியை யுஞ் சிறப்பித்துப் புலவர் பலர் பாடினாரென்பது துணிபு. அற்றேல், இதில் அவ்வரசன் பெயர் சொல்லப்படாமை என்னையெனின்; அகப்பொருளொழுக்கம் பயின்றுவரு கின்ற இதன்கண் அவ்வாறு ஒரு தலைமகன் பெயர் சுட் டிச்சொல்லப்பட மாட்டாதென்பதை முன்னரே காட்டி னாம், இங்ஙனமே நெடுநல்வாடை யுள்ளுந் தலைவன் பெயர் குறித்துச் சொல்லப்படாமை காண்க. இனி, இச் செய்யுள் இல்லோன் றலைவனாக வைத் துப் புனைந்துகட்டி இயற்றப்பட்டதென உரைகூறினாரு முளர். பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் முதலிய அரும் பெருந்தமிழ் நூல்கள் எழுதப்பட்ட காலத்தில் இல்லது புனைந்து கூறுங் கட்டுவழக்குத் தமிழில் இல்லை என் றற்கு அக்காலத்து இயற்றப்பட்டநூல்களே சான்றாமாக லின், அவர் கூறியது பொருந்தாவுரை என்க. அற்றா யின், இறையனார்களவியலுரையில் இல்லோன் தலைவ னாகவரும் புனைந்துரை வழக்குச் சொல்லப்பட்ட தென் னை யெனின்; அங்ஙனம் அருகி வருவதுஞ் செய்யுள் வழக்கேயாம் பொய்யென்று களையப்படாது என்று அறி வுறுத்தற் பொருட்டுச் சொல்லப்பட்டதே யல்லாமல், அக் காலத்து அங்ஙனம் நூல்செய்தல் உண்டென்ப தூஉம் அதனாற் பெறப்பட்டதில்லையென் றொழிக.