பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருகா முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை நாழி நெல்லும் முல்லையுந் தூவி வணங்குதலுங், குளிர் மிகுதியால் தோளிற் கட்டிய கையுடன் நிற்கும் ஓர் இடைபெண் ஆன்கன்றுகட்குத் தேறுதல் சொல்லு தலுங், காட்டிலே பாயுவீடு அமைத்தலும், அப் பாடி வீட்டினுள் நாறசாதி கூடும் முற்றத்திலே யானைப்பாகர் யானையைக் குத்திக் கவளம் ஊட்டுதலும், வில்வினால் வளைவாக அமைக்கப்பட்ட கூடாரங்களுக்கு இடையி லே அரசனுக்கென்று வண்ணத் திரையினால் வேறொரு வீடு வகுக்கப்பட் டிருத்தலும், அவ்வீட்டின் உள்ளே பெண்கள் பலர் கையில் விளக்கு ஏந்தி நிற்றலுங், குதி ரை முதலியவற்றின் கழுத்திற் கட்டிய மணியோசை இரவில் அடங்கிவிட்டதும், மெய்காப்பாளர் அரசனி ருக்கையைச் சுற்றிக காவலாகத் திரிதலும், பொழுதறி வோர் கொப்பரைநீரில் இட்ட நாழிகைவட்டிலைப் பார்த்து வாது அரசன் எதிரிலே இடையாமம் ஆயிற்று என்ற அம், யவனர்களாற் புலிச்சங்கிலி விட்டு மிக அழகிதாக வகுக்கப்பட்ட பள்ளியறையுள் அவர்கள் விளக்குரகாட் டச் சென்று அரசன் பள்ளிகொண் டிருத்தலும், அப் போது ஊமை மிலேச்சர் பள்ளியறையைச் சுற்றிக் காவ லாக இருத்தலும், படுக்கைமேல் உள்ள அரசன் மறுநாட் போரை விரும்பும் உள்ளத்தோடும் உறக்கம் பெறானாய், முன்னாட் போரிற் புண்பட்ட யானை குதிரைகளையுஞ் செஞ்சோற்றுக் கடன் கழித்து இறந்தொழிந்த அரிய போரமறவறையும் நினைந்து வருநதி ஒரு கையை மெத் தையின்மேலும் மற்று ஒரு கையைத் தலையின்கீழும் வைத்துப் படுத்திருத்தலும், தலைமகள் ஏழடுக்குமாளி கையில் தன் கணவன் வருகையை நினைத்து பிரிவின் துன்பத்தை ஆற்றிக்கொண்டு பாவையின் கையிலுள்ள