பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டின் பொருள் நலம் வியத்தல் ருஎ விளக்கானது எரிய மாளிகையின் கூடல் வாயிலிலே வந்துவிழும் ரீர்த்திரள் ஒலிப்ப மயில்போற் படுத்திருத்த லும், அப்போது தலைவன் தன் நேரினை விரைவாகச செலுத்திக்கொண்டு காட்டிலே வருதலும் நாம் நேர காண்கின்றதுபோலவும், ஓவியம் எழுதி நங்கண்ணெதி ரே காட்டுகின்றதுபோலவும் மிக்க அழகுடன் சொல்லப் படுதல் காண்க இனி, இவ்வாசிரியர் தாம் புனைந்துரைக்கும் பொருள்களின் உள்ளே நுழைந்து அவற்றை விரிவாகப் புனைந்துரைக்கின்றா ரென்பதும் ஈண்டு அறியற்பாற்று; இவ்வியற்கை பத்துப்பாட்டுக்கள் இயற்றிய புலவர் எல் லாரிடத்தும் பொதுவாகக் காணப்படுவ தொன்றாகும். ஆயினும், இவரை யொழிந்த ஏனைப்பலவரெல்லாரும் நம் உள்ளத்தின் கற்பனையுணர்வு தளர்வடையா வண்ணம் விரித்துப் புனைந்து சொல்லுதற்கு இசைந்த நன்பொருள் களையே விரித்துரைக்கின்றனர்; மற்று இவரோ புனைந் துரை விரிப்பதாற் சுவைப்படாத ஒரோவொன்றனையுஞ் சிறிது அகலவிரித்துக் கூறுகின்றார்; பாலு அமைக கப்பட்ட தன்மையினை இவர் இன்னுஞ் சிறிது சுருக்கிக் கூறியிருந்தால் இப்பாட்டு இன்னும் பொருட்சுவை முதிர்ந்து விளங்கும். திருமுருகாற்றுப்படை முக லான ஏனைச்சில் பாட்டுக்களுக்கு இம்முல்லைப்பாட்டு இவ்வாற்றால் ஒருசிறிது தாழ்ந்தது போலுமென அவை தம்மை ஒப்புநோக்கிக் கற்பார்க்கு ஒருகாற் றோன்றினுக் தோன்றும். என்றாலும் இப பாட்டின்கட் கண்ட பொருட்கோவை நினைக்குந்தோறும் இன்பம் பயக்கும் விழுப்பம் வாய்ந்து மினிர்கின்றமை காண்மின்! வீடு