பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவும் பாட்டின் நடையும். இனி, இச்செய்யுள் நேரிசை அகவற்பாவாற் செய்யப் பட்ட தொன்றாம்.இதில் ஒவ்வோர் அடியும் நான்கு சீர்களான் வகுக்கப்படுவன; ஒவ்வொரு சீரும் இரண்டு அசைக்குக்குறையாமலும் மூன்றசைக்குமேற்படாமலும் வரும்; புலவன் தான்கருதிய அரும் பொருள்களையெல் லாம் வருத்தமின்றி எளிதாக வெளியிடுதற்கு இவ் வக வற்பாவினும் இசைவானது பிறிதில்லை. எதுகை யின் பமும் மோனையின்பமுந் தோன்ற இயைந்து நிற்குஞ் சொற்கள் மற்றைமொழிகளிற் போலாது தமிழில் மிகப் பெருகியிருந்தாலும், அவ்வெதுகை நயம் மோனை நயங் களையே பெரிதும் நோக்காது பழைய தமிழ்ப்புலவர்க ளெல்லாகும் பொருள் சென்ற வழியே சொற்கள் தொடர்ந்து நிரம்பச் செய்யுட்கள் பலவும் இயற்றுவாரா யினர். பொருளொழுங்கு முதிரத் தங்கருத்துக்களை இணக்கிலைத்துச் செல்லும்போது ஆங்காங்கு இடர்ப் பாடின்றி எளியவாய்த் தோன்றும் எதுகை மோனை களையே அமைப்பர்; எதுகை மோனைகளுக்கு வற்பப் பொருள் பொருத்துவா ரல்லர். பிற்காலத்தில் அகவற்பாப்பாடின புலவர் பெரும் பாலும் ஒவ்வோரடியிலும் முதற்சிரும் மூன்றாஞ்ிரும் எதுகை பொருந்துத் தொடுகதார்கள்; சிலர் இவ்விரண்டு அடிகள் முதற்சீர் எதுகை இணையக்கொளுவினர். அவர் செய்த அப்பாட்டுக்கள் எல்லாம் முதலிலிருந்து இறுகி வரையில் ஒரே ஓசையாய் நடந்து கேட்பார்க்கு வெறும் புணர்வினைத் தோறறுவியா நிற்கின்றன.