பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை சொற்கள் பதினொன்றேதாம். எனவே இப் பாட்டினுள் தூற்றுக்கு இரண்டு விழுக்காடு பிறசொற்கள் புகுந்தன என்றறிக; ஏனையவெல்லாந் தனிச செந்தமிழ்ச் சொற் களாகும். இனி, இம்முல்லைப்பாட்டை ஏனை ஒன்பது பாட் டுக்களோடும் ஒப்பவைத்து நோக்குங்கால், இஃது எனையவற்றைப்போல் மிகஉயர்ந்த தீஞ்சுவை நடையின் தாகக் காணப்படவில்லை யென்பது தோன்றுகின்றது. பொருநராற்றுப் படையில்வந்த, "துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின் பராரை வேவை பருகெனத் தண்டிக் காழிற் சுட்ட கொழூன் கொழுங்குறை' என்னுனும் அடிகளின் தேனொழுகும் அரியகடைபோலா வது, மதுரைக்காஞ்சியிற் போந்த மழைதொழி லுதவ மாதிரங் கொழுக்க ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர எ எழுந்த கடற்றின நனபொன் கொழிப்ப" என்னும் அடிகளின் தேனொழுகும் அரியநடைபோ வது இழுமென் ஓசையுடன் தித்திப்பாக எழுதப்பட்ட ஓரடியையாவது இம்முல்லைப்பாட்டிற் காண்டல் அரிது; இஃது எனையவற்றை நோக்கப் பெரும்பாலும் எங்கும் வல்லென்ற ஓசையுடையதா யிருக்கின்றது எனைப்பாட் டுக்களிற்போலச் சொல்லின் கொழுமை இதன்கண் மிக முதிர்ந்து தோன்றாமையின், இது தன்னைக் கற்பார்க்கு வினைய ஃபால் மிக்க சொல்லின்பம் பயவாதென்று கருது கின்றாம். இப்பாட்டின் நடையினால் இதனை யியற்றிய ஆசிரியர் நப்பூதனார் அறவொழுக்கமும்,வல்லென்ற இயல்பும், அறிவாழமும், மிக்க மனவமைதியும் உடைய