பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுஉ முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை அவர்களைக் காவலாக இருத்தினர்; ஊமைகள் அல்லா ரை அங்குவைப்பின் அரசன் பள்ளியறைக்கண்ணவான மறைபொருள் நிகழ்ச்சிகளை அவர்கள் வெளிவிடுவரென வும், ஒருவரோடொருவர் சிற்சிலபொழுதுகூடி முணு முணுவென்று பேசுதலுஞ செய்வராதலால் அதனால் அரசன் துயில் கெடுமெனவுங் கருதிப்போலும் ஊமைகள் அங்கனம் பள்ளியறைக் காவலராக இருத்தப்படுவாரா யினர்! இன்னும் ஏழடுக்குமாளிகை முதலான உயர்ந்த கட்டிடங்களும், இன்பம் நுகர்தற்குரிய பலவகையான அரும்பண்டங்களும், யானை தேர் குதிரை காலாள் முக லான நால்வகைப் படைகளும் பிறவளங்களும் பழக் தமிழ்நாட்டுமன்னர் உடையராய் இருந்தன ரென்பதும் பிறவும் இப்பாட்டினால் இனிது விளங்குகின்றன.