பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க உரைக் குறிப்புகள் எரு போலாது, என்றுந் தம்மரசர்பால் நெகிழா மெய்யன்பு பூண்டு பொழுதினைப் பொய்த்தலின்றி அறிவிப்பார் இவர் என்பது புலப்படப் 'பொய்யா மாக்கள்' என்றும், பொழு தளந்தறியுந் தொழிலன்றிப் பிறிது அறியாமையின் இவ ரை மக்கள் என்னாது மாக்கள் என்றுங் கூறினார். இப் பொருள் காணமாட்டாத நச்சினார்க்கினியர் பொழுதறி யும் வினையாளர் என்று நேரே பொருள்படும் இச்சொற் றொடரை/மாக்கள் பொழுதளந்தறியும் பொய்யாக் காண் கையர்' எனப் பிறழ்த்தியதன் மேலும் ஈண்டைக்கோர் இயைபின்றியும் உரைத்தார். எறிநீர் வையகம்-வீசுகின்ற கடல்நீராற் சூழப்பட்ட நிலவுலகம். குறுநீர்- சிறிய நீர் இது நாழிகைவட்டிலினுட் கசிந்தநீர். 'குறுநீர்' என்ப தற்கு நாழிகை வட்டில் என்று குறிப்பு எழுதினாருமுளர்; அப்பொருள் நச்சினார்க்கினிய ருரையிலாதல் மற்றை நூல்களிலாதல் பெறப்படாமையால் அது பொருந்தா தென விடுக்க. கன்னல்- நாழிகை வட்டில்; இஃதிப் பொருட்டாதல் "கன்னலுங் கிண்ணமும் நாழிகை வட் டில்' என்னும் பிங்கலந்தைச் சூத்திரத்திற் காண்க. குறுநீர்க் கன்னலின், யாமங் கொள்பவர்' என்றார் மணிமேகலையிலும் (எ, கூச-கூரு).ஒருகடாரத்திலே நீரை நிரப்பி, அடியிற் சிறுதொளையுள்ள ஒரு வட்டிலை இட் டாற் கடாரத்து நீர் அப்புழை வழியே வட்டிலினுள் ஊறும்; அங்ஙனம் ஊறும் நீரினளவுக்குத்தக நாழிகை கணக்கிடுவர். பொழுது இனைத்து என்று பொழுது அவாய் நிலையான் வந்தது. உடையினையும் (ருகூ - காசா) மெய்ப்பையினையுந் தோற்றத்தினையும் யாக்கையினையமுடைய யவனர், புலிச் சங்கிலிவிட்டுக் கைசெய்த இல்லில் அழகிய மணி விளக்