பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எகூ முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை கினை ஒளிரவைத்து, வலியகயிற்றிற் சுருக்கிய திரையை வளைத்து முன் ஒன்றும் உள்ளொன்றுமாக இரண்டறை வகுத்த பள்ளியறையுட் புறவறையின் கண்ணே சட்டை ட ஊமைமிலேச்சர் அருகே காவலிருப்பரென்க. யிட் மத்திகை-சவுக்கு, குதிரைச் சம்மட்டி. மத்திகை வளை இயஉடை - குதிரைச்சம்மட்டி சூழப்பட்ட உடை; மறிந்துவீங்கு செறிவுஉடை - மடங்கிப்புடைக்க நெருங் குதலுறக்கட்டின உடை. மெய்ப்பை-சட்டை, வெரு வருநதோற்றம் காண்பார்க்கு அச்சம் வருதற்கேதுவான தோற்றம். வலிபுணர்யாக்கை - வலிமைகூடிய உடம்பு. யவனர் - கிரேக்கர், சோனகர் (Ionians). மணிவிளக்கம் பளிங்கு விளக்கு; மணிபோறலிற் பளிங்கும் மணி எனப் பட்டது; மணியிற்றிகழ்தரு" என்பதற்குப் பரிமேலழ கியாரும் 'பளிக்கு மணி' என்று பொருளுரைத்தார், திருக்குறள், கஉஎ௩. எழினி-திரை. 'உடாயின் உரைக் கும் நாவினுரையா' எனமாறி உடம்பாற் குறிகாட்டித் தெரிவித்தலன்றி நாவால் உரைக்கமாட்டாத என்க. மிலேச்சர் - ஆரியர், பெலுச்சிதானத்தினின்றுவந்த துருக் கர்; 'பெலுச்சி' என்பது மிலேச்சர் எனத் திரிந்தது; பெலுசசிதானத்தின் வழியாகப் பரதநாட்டினுட் புகுந் தமை பற்றியே பண்டைக்காலத்தில் ஆரியர் தமிழரால் மிலேச்சரென அழைக்கப்பட்டனர்; திவாகரத்திலும் மிலேச்சர் ஆரியர்" எனப் போந்தமைகாண்க. (கூஎ - எகூ) பள்ளியறையின் அகத்தே சென்ற அர சன் நாளைக்குச்செய்யும் மிக்க போரினை விரும்புதலாலே உறக்கங் கொள்ளானாய், முன்னாட்களிற் பகைவர் வீசிய வேல் நுழைந்தமையாற் புண்மிக்குப் பெட்டை யானை களையும் மறந்த களிற்றியானைகளையும், யானைகளின் பரிய