பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க உரைக் குறிப்புகள் எஎ தும்பிக்கை அற்று விழத் தாம் அணிந்த வஞ்சிமாலைக்கு நல்வெற்றியினைச் செவ்விதாக்கிய செஞ்சோற்றுக் கடன் தப்பாமற் கழித்து இறந்த மறவரையும் நினைந்துங், காவ லாயிட்ட தோற்பரிசையினையும் அறுத்துக்கொண்டு அம் புகள் அழுந்தினமையாற் செவியைச் சாய்த்துக்கொண்டு தீனி எடாமல் வருந்துங் குதிரைகளை நினைந்தும் ஒரு கையினைப் படுக்கையின்மேல் வைத்து மற்றொருகையால் முடியைத்தாங்கியும் நீளச்சிந்தித்து இரங்கி இங்ஙனமெல் லாம் அவ்விரவைக் கழித்துப், பின்னாளிற் பகைவரைக் குறித்துப் படைக்கலங்கள் எடுத்த தன்வலிய விரலாலே அவர்தம்மை யெல்லாம் வென்றமையின் தான் அணிந்த வஞ்சிமாலைக்கும் நல் வெற்றியினை நிலைநிறுத்திப், பின்னா ளில் தன் மனைவியைக்காணும் மகிழ்ச்சியாற் பாசறை யில் இனியதுயில் கொள்கின்றான் என்க. 'மண்டு' என்பதனை அமர் என்பதனோடாதல் நசை யென்பதனோடாதல் கூட்டி மிக்குச்செல்லும் போர், மிக் குச்செல்லும் நசை என்க. பாம்புபதைப்பு அன்ன - அடி யுண்ட பாம்பின் துடிப்பையொத்த; இதுவெட்டுண்டு விழுந்து துடிக்கும் யானைத்தும்பிக்கைக்கு உவமம் தேம் பாய் கண்ணி - தேன் ஒழுகும் வஞ்சிமாலை. சோறு வாய்த் தல் -சேஞ் சோற்றுக்கடன் தப்பாமற் கழித்தல்; இதனைச் "சிறந்த திதுவெனச் செஞ்சோறுவாய்ப்ப" என்னும் புறப்பொருள் வெண்பாமாலை யுரையிலுங் காண்க. கடகம் - கங்கணம், தொடி,வளை; இவ்அணிகலன் ஆண் மக்களும் அணிதலுண் டென்பது "கண்ணெரிதவழ வண்கை மணிநகு கடகம் எற்றா" என்னுஞ் சீவகசிந் தாமணிச் செய்யுளிலுங் காண்க. கையைத் தலைக்கு அணையாக வைத்தலிற் கையில் அணிந்த கடகத்தை முடி