பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஅ முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை யிற்சேர்த்தி என்றார். நகைதாழ்கண்ணி-ஒளிதங்குமாலை, என்றது தனக்குண்டாம் ஒளி தங்குதற்கு அடையாள மாய் இட்ட வஞ்சிமாலையை. அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை - பகையரசு இருந்து நடுங்குதற் குக் காரணமான வெற்றிமுரசுமுழங்கும் பாசறை என்க. பனிக்கும் - நடுங்கும். (அo - கoங) பொழிப்புரை பொருட்பாகு பாட்டில் விளக்கமாக எழுதப்பட்டிருக்கின்றது, ஆண்டுக்காண்க. நிறைதபு புலம்பு - நிறை கெடுதற்கு ஏதுவான தனி மை."நிறையெனப்படுவது மறைபிறரறியாமை" என் றார் கலியிலும். ஏஉறுமஞ்ஞை - அம்புதைத்தமயில், இது மயிலின் சாயலினையுடைய தலைமகள் நடுக்கத்திற்கு உவ மையாயிற்று. இடம் சிறந்து உயரிய இடம் அகன்று சிறந்து உயர்ந்த. பாவை-வெண்கலத்தாற் செய்த பிரதி மை; இதன்கையில் விளக்கெரிய விடுவது அரசர்க்கு வழக்கம். முடங்கு இறை-கூடல்வாய்; கூரையின் இரு பகுதிகள் ஒன்று பொருந்தும் மூட்டுவாய். மாத்திரள் அருவி - பெரிதுதிரண்டுவிழும் அருவி நீர். இன்பல் இமிழ் இசை - இனியவாய்ப் பலவகையாய் ஒலிக்கின்ற ஓசை. ஓர்ப்பனள் கிடந்தோள்-செவியிற் கேட்பவளாய்க்கிடந்த தலைவியின். அம்செவி நிறைய ஆலின - உட்செவி நிரம்ப ஒலித்தன. பிறர் வேண்டுபுலம்-பகைவர் விரும்பிய நிலங் கள். வயிர்-ஊதுகொம்பு. வலன்நேர்பு ஆர்ப்ப - எய்திய வெற்றிக்கு ஒத்து ஒலிப்ப. அயிர - நுண்மணலிடத்த; மணன்மேல் வளர்தலின் 'அயிரகாபா' என்றார். அஞ்ச னம் -மை; மைந்நிறமுடைய பூவுக்கு ஆகுபெயர். பொன் கால-பொன்நிறமானபூவைத் தர. முறிஇணர் -தளிருங் கொத்தும். தோடு ஆர்-இதழ்நிறைந்த; தொகுதி நிறைந்த,