பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டினியல்பு. குங் குருகு என்றும் போந்த வருணனை வாக்கியங்களானே பழைய தமிழ்ப்புலவரின் விழுமிய உலகியில் அறிவினை இனிது அறிந்துகொள்ளலாம். இன்னும் இவைபோன்ற உதாரணங்கள் நூறு நூறாகப் பெருக்கலா மேனும், இங்கு அதற்கு இடம் பெறுதல் கூடாமையின் இதனை இவ்வளவில் நிறுத்துகின்றாம். இத்துணை நுட்பமான உலகியல் அறிவு பண்டைக்காலத்துத் தண்டமிழ்ப் புலவரிடங் காணப்படுதல் போல, மற்றைப் பாஷைகளில் வல்லராய் விளங்கிய எனைப் பழம்புலவரிடத்தும் காணப்படுதல் அரிது. இன்னும் இவ் வாறே பழைய தமிழ்ப்புலவர் உலக இயற்கைப் பொருட் காட் சிகளைப் புனைந்துரைத்த முறையும், அவ்வுலக இயற்கைக்கும் மக்களியற்கைக்கும் உள்ள பொருத்தம் பற்றி அவர் வெளி யிட்ட அரிய கருத்துகளின் விருப்பமும் யாம் வேறு தனி யே விரித்தெழுதும் தமிழ்ச் செய்பள் வழக்கு என்னும் விரிந்த கட்டுரையிலே விளக்கிக் காட்டுவாம். ஆண்டுக்கண்டு கொள்க. கி.மு நானூறு ஆண்டு முதல் கி. பி. நூறாண்டு வரையில் தொடர்புற்று விளங்கிய செந்தமிழ் இலக்கிய காலத்தில் இயற்றப்பட்ட நூல்களின் இயற்கையும், அந்நூல்களுக்கும் முல்லைப்பாட்டிற்கும் உள்ள இயை பும், அக்கால வரலாறும். இனிக் கிறித்து பிறப்பதற்கு முன் நூற்றாண்டுகளிலே மிகவும் புகழ்பெற்று விளங்கிய புலவர் காலமும், அவர் பிறந்த பின் நூற்றாண்டிலே அவ்வாறு விளங்கிய புலவர் காலமும் செந்தமிழ்மொழி மிக உயர்ந்த நிலையிலே இருந்து திகழ்ந்த காலமென்று அறிதல் வேண்டும். கிறித்து பிறப்பதற்கு முன் ஒரு நானூறு ஆண்டும் அவர் பிறந்தபின் ஒரு நூறு ஆண்டும் சேர்ந்து முடிந்த ஓர் ஐந்நூறாண்டும் தமிழ்மொழி மறுவற்ற மதிபோற் கலை நிரம்பி விளங்கிய காலமாகும். இக்காலத்தில்