பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டினியல்பு அடியினால் அவர்களைத் தேய்த்து விடுக! நின் அடி அகலமா யிருக்கின்றது. "ஓ இந்திரனே ! சிவந்த நிறம் உடையராய் ஊளையிடு கின்ற பிசாசரை அழித்து விடுக என்னும் இவைபோன்ற பாட்டுக்களால் அவர் அவ்வி யல்பு உடையரா சல் தணியப்படும் இவ்வியல்புள்ள ஆரியர் இந்தியாவினுட் புகுந்தபோது அங்கே தமக்கு முன்னிருந்த தமிழரில் அறிவு திருந் தாது சிறிது கொடுத்தோற்றம் உடை யாராய் இருந்தவர் தமக்கெல்லாம் ! பிசாசர் இராக்கதர் என்னும் பெயர்கள் இட்டு உரைப்பாராயினார். கிரேக்கர் மற்றைச் சாதி யாரைப் பார்பேரியர் என்றும், தமிழர் எனையோரை மிலேச் சர் என்றும் அழைத்தல்போல் ஆரியரும் தமிழரிற் சிலரை அவ்வாறு பெயரிட்டழைத்தார். தமிழர் முன்னாளில் ஆரிய ரையெல்லாம் மிலேச்சரென்று அழைத்தமை ஆரியரென் போர் மிலேச்சராவர்" என்னும் பிங்கலத்தைச் சூத்திரத்தால் நன்கறியப்படும். உடல் வலிமை மிகவுடைய ஆரியர் இந்தியா வினுட் புகுதலும் தமிழரிற் சிலர் அவரோடு போர்புரிந்து தோல்வியடைந்தனர்; சிலர் அமைதியின் பொருட்டு மலை களினுங் காடுகளிலும் போய் இருந்தனர்; சிலர் கடும்போர் மலைந்து ஆரியரை வெற்றிபெற்றனர்; சிலர் தாந்தாம் இருந்த இடம் விட்டுப் பெயராமல் ஆரியரை விருந்தாக ஏற்று அவரு டன் உறவாடி அவர் வழக்க ஒழுக்கங்களிற் சிலவற்றைத்தாம் தழுவியும், தம் வழக்க ஒழுக்கங்களை அவர் தழுவுமாறு செய் வித்தும் அவரோடு ஒருமையுற்று வாழத்தொடங்கினார். இவ் விருவகைச் சாதியாரும் ஒருவரோடு ஒருவர் மருவி வாழும் நாட்களில் அவ்வவர் தத்தமக்கே உரிய வழக்கவொழுக்கங்களை முழுவதுந் திரித்துப் பிறழவிடாமல், அவை தம்மிற் பெரும் பான்மையவற்றை முன்னிருந்தபடியே எடுத்துக் கடைப் பிடித்து ஒழுகினார். இக்காலத்தில் ஆரியருட் குருக்கள்மார் பலர் தோன்றிப் பலவகையான வேள்விகள் செய்யவேண்டும் என்று வற்புறுத்தி அவற்றைத் தமிழ அரசர் உதவியாற்