பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டினியல்பு. கக றே நூல் எழுதுபவனாவன். அக்கால இயற்கை அல்லது அம் மக்கள் ஒப்புரவு அவன் எழுதுவனவற்றை எல்லாம் தன் உரு வாக்கி அவற்றிற்குத் தன் நிறத்தை ஊசாட்டுகின்றது. இதனை நாம் கண்டறிவதற்கு அக்காலத்தின் பொது இயற்கையும், அம்மக்கள் நடையினியற்கையும், அவன் இருக்கும் இடத் தின் இயற்கையும் இன்றியமையாது ஆராயற்பாலனவாம்.* என்று மிக நுட்பமாக எடுத்து மொழிந்திட்டார். அது கிடக்க. இனி இவ்வோர் ஐந்நூறாண்டிற் றோன்றிய நூல்களெல் லாம் பெரும்பாலும் அக்கால இயற்கை பிரதிபலிக்க விளங் கும் ஒரே தன்மை யுடை யனவாகு மென்று தெரிதல் வேண் டும். அறிவு ஆழமின்றி ஆரியமக்கள் செய்து போந்த வீணான வெறுங்கருமங்களிற் கட்டுப்படாமல் தனியே பிரிந்து நின்ற தமிழ் மக்கள் உலக இயற்கையினையும் மக்களியற்கையினையும் உள்ளுருவி நுழைந்து ஆராய்ந்து தாங்கண்ட அரிய பொருள் நுட்பங்களை அமைத்து நூல்கள் இயற்றினார். ஆகவே, உலக இயற்கையினையும் மக்களியற்கையினையும் ஆராயும் ஆராய்ச்சி இக்காலத்துத் தோன்றிய நூல்கட்கெல்லாம் பொதுத்தன்மை யென்றுணர்க. இனி இவ்வுலக இயற்கையினை ஆராயும் நூல் கள் எல்லாம் புறப்பொருள் எனவும், மக்களியற்கையினை ஆராய்வனவெல்லாம் அகப்பொருள் எனவும் தொல்லாசிரிய ரால் வகுக்கப்பட்டன. இவற்றுள் அகப்பொருள் என்பது ஆண் பெண் என்னும் இருபாலாரையும் செறியப்பொருத்துவ தாய், மற்றெல்லா உணர்வுகளையும் நினைவுகளையும் தனக்குக் கீழாக நிறுத்தித் தான் அவற்றின் மேல் அமர்ந்து தனக்கு நிக ரின்றிப் பெருமையுடன் தோன்றுவதாய், இன்பமுந்துன்பமும் மெல்லாம் தோன்று தற்குத் தான் ஒரு நிலைக்களனாய், எல்லா உலகங்களும் எல்லாப் பொருள்களும் தன்னைச் சுற்றிச் சுழன் று செல்லத் தான் அவற்றின் இடையே சிறிதுந்திரிதலின்றி நிலைபெற்று விளங்குவதாய் உள்ள அன்பு அல்லது காதல் என் பதனை அடிப்படையாகக்கொண்டு மக்களியற்கை முழுவ

  • The Literature of the Georgian Era.

T Love.