பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரித்திரக் குறிப்புகள். Fஎ டவில்லை யென்பது தோன்றுகின்றது. பொருநராற்றுப் படையில்வந்த, "துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின் பாராரை வேவை பருகெனத் தண்டிக் காழிற் சட்டசோழன் கொழுங்குறை என்னும் அடிகளின் இனிமை களிந்த நடைபோலாவது, மதுரைக்காஞ்சியிற் போந்த, மழைதொழி லுதவ மாதிரங் கொழுக்க ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர எழுந்த கடற்றின் நன்பொன் கொடுப்ப என்னும் அடிகளின் தேனொழுகும் அரியகடை போலாவது இழுமென் ஒசையுடன் தித்திப்பாக எழுதப்பட்ட ஓரடியை யாவது இம்முல்லைப்பாட்டிற் காண்டல் அரிது; இஃது ஏனைய வற்றை நோக்கப் பெரும்பாலும் எங்கும் வல்லென்ற ஒசை யுடையதாயிருக்கின்றது. சொல்லின் கொழுமை ஏனைப்பாட் டுக்களிற்போல் இதன்கண் மகமுதிர்ந்து தோன்றாமையின், இது தன்னைக்கற்பார்க்கு ஏனையபோல் மிக்க சொல்லின்பம் பயவாதென்று கருதுகின்றாம். இப்பாட்டின் நடையினால் இதனை யியற்றிய ஆசிரியர் நப்பூதனார் துறவொழுக்கமும், வல்லென்ற இயல்பும், அறிவாழமும், மிக்க மனவமைதியும் உடையாரென்பது குறிப்பாக அறியப்படும்; காட்டிடத்தை யும், மழைகாலத்தையும், தலைவி தனிமையையும் பொருளாகக் கொண்டு இச்செய்யுள் யாத்தமையானும், துறவோர் கருவி களை உவமைடுத்துக் காட்டுதலா எனும் அவையே இவர் குண மாமென்பது தெளியப்படும். இப்பாட்டின்கட் காணப்பட்ட | Wடைக்காலத் தமிழ் ரின் வழக்கவொழக்கச் சரித்திரக் குறிப்புக்கள். இனி இப்பாட்டினால் பண்டைக்காலத் தமிழரின் வழக்க ஒழுக்கங்கள் சில அறியப்படுகின்றன . இனி நிகழும் நிகழ்ச்சி