பக்கம்:முல்லை கதைகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 கடைசிவரைக் கன்னியாகவே இருந்துவிட நேருமோ என்ற பயம் அலட்டியது. வில்லையும், லக்டியத்தையும் ஒதுக்கிவிட்டு என்னைக்கொண்டே சுயம்வரம் தேடச் சொல்லியிருந்தால், எனக்கிருந்த மனநிலையில் கர்ணனுக் குத்தான் மாலை யிட்டிருப்பேன். மேலும் அர்ஜுனனுக்குப் பின் கர்ணன் ஒருவரால் தான் அந்த லக்ஷயத்தை அடிக்க முடியும் என்று பலரும் கூறிவந்த சொல் மண்டபத்துக்கு வருமுன்னமே கர்ணனைப்பற்றி மானசீகமாகக் கற்பனை செய்யத் தூண்டியிருந்தது. என்னை அடைவதற்குரிய பந்தயத்தில் ஒருவரும் வெற்றியடைய மாட்டார்கள் என்றுதான் நினைத்தேன். வில்லை நாணேற்றவே திறனற்றவர்கள் மத்தியிலிருந்து கர்ணன் எழுந்து வந்து, வில்லை அநாயாசமாகத் துரக்கி நிறுத்தி நாணேற்றிய சாமர்த்தியம் இன்றும் என் கண் முன் நிற்கிறது. கர்ணன் ஒருவர் தான் வில்லை நாணேற்றினார். அப்போதே என் கைமாலையும் நானும் ஏனோ துடியாய்த் துடித்தோம். கர்ணன் வில்லையும் வளைத்தார். இன்னும் அரைக் கணத்தில் எனக்கு அவர் கணவராகி விடுவார் என்று எண்ணினேன். எல்லோரும் அப்படித்தான் நினைத்திருக்க வேண்டும். ஆனால், அந்தப் பாழும் வில் துள்ளித் திமிறி கர்ணனைத் தட்டி வாரிவிட்டது. கர்ணனின் ஏற்றிய வில்லின் நானும் கழன்றுவிழுந்து சுருண்டது. கர்ணனும் தோற்றார். அர்ஜுனனுக்குப் பின் கர்ணன் - அவருக்கும் இந்தக்கதி என் கதியும் அந்த வில்லோடு இணைந்து விட்டதா என்று உள்ளம் தடுமாறிற்று. இந்த வேளையில்தான் பிராமண வேஷம் பூண்டிருந்த அர்ஜுனன் எழுந்து அண்ணனிடம் அனுமதி கேட்டார். அர்ஜுனன் எழுந்ததும் சபையே வாய்விட்டு நகைக்க ஆரம்பித்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/101&oldid=881436" இலிருந்து மீள்விக்கப்பட்டது