பக்கம்:முல்லை கதைகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பரிவையும் பச்சாத்தாபத்தையும் எப்படி வேண்டுமானா லும் அர்த்தப்படுத்திக் கொள்ளட்டும். எனினும் எனக்கு கர்ணன் மேல்தான் நேர்மையான அன்பு படர்ந்திருந்தது. கர்ணன் நினைவுதான் என் இளமையைக்கூடக் கட்டுக் குலைக்காமல் காத்து வந்தது. இன்று கர்ணன் மடிந்தார். அப்படியானால் ஒட்டிக்கொண்டிருந்த வாழ்க்கைக் கனவும் இன்றோடு உதிர்ந்தது என்றுதான் கொள்ள வேண்டுமா... படுக்கையில் படுத்துக்கொண்டு விம்மி விம்மி யழுது கொண்டிருந்தேன். சுற்றுப்புறச் சூழ்நிலையைப்பற்றிய நினைவுகூட இல்லாமல் அழுதேன். திறந்து வைத்த நெஞ். சின் வழியாய் கட்டிக்கிடந்த சோகமெல்லாம் பீறியடித் தது. அழுவதில் சுகமிருந்தது; அழுதேன். 'அம்மா, அம்மா!' என்று, தாதி அழைத்த குரல் கேட்டது. - கண்ணைத் துடைத்தவாறு எழுந்தேன். பக்கத்தில் தாதி நின்று கொண்டிருந்தாள், அவளிடம் என்னவென்று கேட்கக்கூடத் தெம்பில்லை; கழுத்தை மட்டும் நிமிர்த்தி னேன், அவள் சொன்னாள் : "அர்ஜுன மகராஜா வந்திருக்கிறார்.' 'அர்ஜுனரா?" என்றேன். அதற்குள் அர்ஜுனரே வாசலில் வந்து நின்றார். வெற்றி விஜயனாக வந்த வெறியில் என்னை வந்து அணைந்து கொள்வார் என்றுதான் நினைத்தேன். நானும் அவரை உத்ஸாகத்தோடு வரவேற்பேன் என்று தான் அவரும் எதிர்பார்த்திருப்பார். இரண்டும் நடக்கவில்லை. அர்ஜுனன் வாச்லிலேயே நின்றார். முகத்தில் களை இல்லை; ஆளை மயக்கும் புன் சிரிப்பு இல்லை. கர்ணனைக் கொன்ற களிப்பு இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/104&oldid=881439" இலிருந்து மீள்விக்கப்பட்டது