பக்கம்:முல்லை கதைகள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107. "அப்பா மகனே!' என்று அலறினாள் அவள். "யாராது? கர்ணனின் தாயா? தேர்ப்பாகன்-' என்று சிந்திப்பத்ற்குள் அவளே நிமிர்ந்தாள். கர்ணா. அன்று உனக்குத் தந்த வரத்தை மறந்துவிடவில்லை. இந்தா, என் நெஞ்சின் பாரமும், உன் ஆவலும் தணியட்டும்' என்று கூறிக்கொண்டே கர்ணனுக்கு ஸ்தன்யபாணம் செய்தாள், அவள். நிமிர்ந்தவளைப் பார்த்தேன். அவள் என் தாய் குந்தி: என்தாய் குந்திதேவிதானா, கர்ணனின் தாய்? - அர்ஜுனன், பீமன் தம்பியர் எல்லோருமே திகைத் தனர் நான் நடுங்கிவிட்டேன். கண்ணனும் நின்றான். சிலையாய் நின்றான். குந்திமாதா மனப்பாரம் குறையும் வரையிலும் பிரலாபித்தாள் அழுதாள். அலறினாள், விழுந்தாள், புரண்டாள்! கர்ணன் குந்தி புத்திரன், சூரிய புத்திரன், என் அண்ணன்!'-இவ்வளவு புரிந்துவிட்டது. "அண்ணா!' என்று கர்ணனின் காலடியில் விழுந் தேன். அதற்குள் கர்ணன் இறந்துவிட்டான். என் தலைக் கிரீடம் நழுவி உருண்டு அந்தச் சடலத்தின் காலடியில் புரண்டது. கர்ணன் என் சகோதரன், குந்தியின் புதல்வன்இந்த உண்மை என் மனசைப் பிய்த்துக் குடைந்தது. கர்ணன் என் விரோதி. எனினும் என் அண்ணன் ! 'கடைசியில் சகோதர ஹத்திதனா பாண்ட வர்களைச் சூழவேண்டும்? கர்ணன் மட்டும் உயிரோடிருந்தால், இந்த ராஜ்யத்தையே அவன் காலடியில் அர்ப்பணிப் பேனே!'-என்று எண்ணினேன். பக்கத்தில் கண்ணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/109&oldid=881444" இலிருந்து மீள்விக்கப்பட்டது