பக்கம்:முல்லை கதைகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர் குற்றவாளியா? கோவை அ. அய்யாமுத்து “நீர் குற்றவாளியா அல்லவா?" என்று ಆಹಹಹ ஒருத்தமாக அவன் என்னைக் கேட்டான். அப்போது எனக்கு ஆண்டுகள் ஐம்பது நிறைந்திருந்தன. அவனோ இருபதுக்கு மேல் ஒன்றிரண்டு கடத்த இளைஞன். நான் சட்டப் புத்தகங்களை யெல்லாம் கரைத்து குடித்திருந்தேன். அனோ எழுத்தறியாதவன். நான் செல்வத்தில் திளைத்திருத்தேன். அவன் வறுமையில் முளைத்திருந்தான். நான்_குற்றம் விசாரித்துத் தண்டிக்கும் நீதிபதியாக வீற்றிருந்தேன். அவனோ குற்றஞ்சாட்டப்பட்டு என் முன் கைதிக்கூண்டில் நின்றிருந்தான். அவன் சாமான்யக் குடியானவன். அவனை நான் கண்டபின் ஆண்டுகள் இருபது பறந்தோடிவிட்டன. ஆனால் அவன் என் மனக்கண் முன் இன்றும் காட்சி யளித்த வண்ணமாய் நிற்கிறான். அவன் கடாவிய சொற்கள் என்னிரு செவிகளை இன்றும் குடைந்து கொண்டிருக்கின்றன. நான் முப்பதாண்டுகள் நீதிபதியின் இடத்தை அலங் கரித்திருக்கிறேன். மூவாயிரம் வழக்குகளை விசாரித்து நீதி செலுத்தியிருக்கிறேன். முப்பதினாயிரம் குற்றவாளி மு. க.-1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/11&oldid=881445" இலிருந்து மீள்விக்கப்பட்டது