பக்கம்:முல்லை கதைகள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 கோபம்.அவன் வாயை அடைத்துவிட்டது. 'ஆளைத் தூக்கி எறிஞ்சு பேசறத்துலே அவங்கிளுக்கு நிகர் அவங்க தான். ஒண்னு முதுகிலே வெச்சா சரியாப்போயிடும். என்ன தைரியமா கேக்கறா பார்?-இருக்கட்டும். இப்போ கொளந்தைப் பசி அடங்கட்டும். அதான் இப்போ முக்கியம். அவளுக்குத்தான் அந்த எண்ணமில்லேன்னா நமக்குக்கூடவா இல்லே? நான் பெற்ற மகன்...' அந்த ஆள் அப்பவே போய்விட்டான். அவள் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு குழந்தையை எடுத்துவிட்டுக்கொண்டே : "நீ எங்கேயாவது புளைப்புத் தேடினாயா? என்ன வாச்சு; அவள் கேள்விக்குப் பதில், அவன் முக வாட்டத் திலேயே கிடைத்துவிட்டது. r இன்னிக்கு கடைத்தெருவைச் சுத்தினேன் சித்தாள் வேனுமான்னு கடைகடையா ஏறிக்கேட்டேன். ஒவ்: வொத்தன் என்னென்ன சொல்றான்கறே? - ஏதோ வேலையில்லேன்னு சொல்லிக் கழிச்சால் போச்சு. இ. க்காப் பேசறான்க. 'சித்தாள் வேலையா? இங்கே இருக்கிறவனே ஈ اثهறான். யுத்தம் வந்தாலும் வந்தது, என்ன சாமான் இங்கே இருக்குது வியாபாரம் பண்ண? என்கிறான் ஒத்தன். "ஒரு கடைக்காரன் வேலையில்லேன்னு சொல்லிட்டு நான் படியிறங்கினப்புறம் என்னை மெனக்கெட்டு மறுபடியும் கூப்பிட்டு, நான்தான் கடைக்காரன்-நான் இங்கே என்னத்துக்கு குந்திக்கட்டு இருக்கேன் தெரியுமா? -ன்னு கேட்டான். "தெரியாதே! என்னேன். எனக்கெப்படித் தெரியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/118&oldid=881455" இலிருந்து மீள்விக்கப்பட்டது