பக்கம்:முல்லை கதைகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 'சாமான் வாங்க வரவங்களுக்கெல்லாம் அது இல்லே, இது இல்லேன்னு சொல்லியனுப்பத்தான் குந்திக்கிட்டு இருக்கேன். இல்லை இல்லை என்று கத்திக் கத்தி தொண்டை, வத்திப்போச்சு. இல்லைப்பாட்டுப் போடத் தான் இனிமேல் ஒரு ஆள் போட்டுக்கணும்போல் தோணுது. .ே ப ப் ப ா புளைக்கமாட்டாதவனே, பொட்டலங் கட்டக்கூட காகிதமில்லாத காலமிது-அது கூட யுத்தத்துக்கு வேணுமாம்-நீ கூடப் போறதுதானே! "இந்தப் பட்டணத்துப் பேச்சு நமக்குப் புரிய மாட்டேன் னு:து. எல்லாத்துக்கும் இடக்கா பேசறாங்க. சித்தே நேரத்துக்கு முன்னாலே தான் ஒரு நாள் என்னை ஒரு காரணமுமில்லாமலே விரட்டிட்டுப் போனான். அத்தோடே கொளந்தையெத் தனியா விட்டுட்டு எவ் வளவு நேரம் வெளியிலே சுத்த முடியுது? உன் மாதிரியா? காலையிலேபோன பொம்புள்ளே, திரும்பி வர இத்தனை நேரமாச்சுது ன்னா என்னாத்தை சொல்றது?" "என்னாத்தை சொல்லப்போறே; யா ரா வ து இஸ்த்துக்கிட்டு ஓடிட்டாங்கன்னு பாத்தியா?" அவன் மனம் சுருக்கென்றது. வயிற்றுக்குக் கஷ்டம் வந்துட்டுதுன்னா, கொண்ட்வளுக்குக்கூட இவ்வளவு எளக்காரமாப் போயிடுமா?...' குழந்தை மறுபடியும் கத்த ஆரம்பித்துவிட்டது. அவன் கண்கள் ஜ்வலிக்க ஆரம்பித்தன. இன்னிக்கு அவன்மனம் நோவடிக் கறத்திலேயே அவளுக்கு சந்தோசமா?" 'ஏன் அதுக்குள்ளேயும் விலக்கிட்டே?” "சரிதான் என் புளைப்பும் உன் புளைப்பும் அதிலே தானிருக்குது.' . "என்ன அம்மே வந்ததே மொதக்கொண்டு ஒரு மாதிரியாயிருக்கே. புதிர்போட்டு பேசறே-என்ன? உடம் புக்கு பூசைக்காப்பு போடலுமா?" .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/119&oldid=881456" இலிருந்து மீள்விக்கப்பட்டது