பக்கம்:முல்லை கதைகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 "நான் என்ன சொல்றது. எத்தனையோ விசயம் கவனிக்கவேண்டியிருக்குது நம்ப புளைக்க வந்துட்டோம் -உனக்கு சரியா புளைப்புக் கிட்டற வரைக்கும் வயத்தே ரெண்டு பேரும் கட்டிப் போட்டுக்கிட்டிருக்க முடியுமா? என் வயத்தே அவங்க வீட்டிலே களுவிட்டாலும் என் சம்பளம் உனக்கு மிச்சம்தானே. நான் ஒ ப் பு க் கொண்டேன்.' மெளனம் இருவரிடையிலும் தேக்கியது. சத்திரத்தில் மூட்டையும் முடிச்சுமாய் இறங்குபவரும் வெளியே போவாருமாய் சண்டை போடுபவரும், கொட்டமடிப்ப வருமாய் இரைச்சல் காதைப் பொழிந்தது. ஆயினும் இவ் விருவருக்கு மாத்திரம் அது தூரத்துச் சத்தமாய்த் தானிருந்தது. - 'நீ ஒப்புக்கொண்டது தப்பு'-என்றான். "அப்படியானால் நம்ப இங்கே வந்ததே தப்பு." 'நம்ப புளைக்க வந்ததே தப்பு. ஆனால், நம்ப ஊரிலே,மொத மொதல்லே ஒருத்தரை யொருத்தர் சந்திச் சோமே அதுவே தப்பு-" - 'இப்படி ஒருத்தரை யொருத்தர் கசந்துகிட்டுப் பேசினால் என்ன பிரயோசனம். புளைக்க வந்துட்டோம் புளைச்சு ஆகணும். இந்தா மூணு ரூபா முன்பணம் வாங்கி வந்திருக்கேன். செலவுக்கு வெச்சிக்கோ-' 'இதென்ன நீ எனக்கு சோறு போடனும்னா -நான் ஆண் புள்ளையா பிறந்துட்டு இருக்கேன்!-என்னான்னு நினைச்சுட்டே உன் மனசிலே என்னை?” - அவள் தொண்டை கம்மியது. 'நீ வேறே நான் வேறென்னு துட்டு வாங்கறப்போ என் நெணைப்புலே படல்லே! "ஆமா-அப்போ நம்ம ரெண்டுபேரும் கூடிப் பிறந்த கொளந்தே தான் வேறாப் போயிட்டது இல்லையா?-' (Լթ. க.-8 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/124&oldid=881462" இலிருந்து மீள்விக்கப்பட்டது