பக்கம்:முல்லை கதைகள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I26 3 அவன் தெருவில் மனம்போனபடி போய்க்கொண்டி ருந்தான். அந்த ஒருவாரத்துக்குள் அவனுக்கும் அவளுக்கும் பேச்சு பட்டென அறுந்துபோயிற்று. அவன் கண்ணெ திரே படிப்படியாய் அவன் குழந்தை தேய்ந்துபோகும் கோரம் காணக்காண அவனுக்குச் சகிக்க முடியவில்லை. அவள்மேல் குற்றமில்லை என்று அவன் மனம் புரியாமலே அறிந்தது. இருந்தும் அவள் தனக்காகச் செய்யும் தியாகம் அருவருப்பையும் பயங்கரத்தையும் தான் விளைவித்தது. அவ்விருவருக்காக அக்குழந்தை தியாகம்... ஒரொரு சமயம் அவள் அவ்வீட்டில் எஞ்சிய ஆகாரங் களை அவன் சாப்பிடுவதற்காகக் கொண்டுவருவாள் அதைச் சீந்தக்கூட அவன் மனம் சிலிர்க்க ஆரய பித்து விட்டது. "சீ இதுவும் ஒரு புளைப்பா - இப்படி இந்த உசிரை யும் உடலையும் ஒன்னாத்தான் வெச்சு வாழமே இருந் தால் தான் என்ன?" -டேய் நாட்டுப்புறம் எங்கே பாத்துக்கிட்டுப் போறே. வண்டியிலே மாட்டிக்கிட்டு சாவறத் துக்கா? சாவணும்னா சண்டியிலே போய் சாவறதுதானே!! : டாணாக்காரன் போட்ட அதட்டல் அவன் மனசில் அசரீரி மாதிரி பாய்ந்தது. இந்த யோசனை எனக்கு ஏன் அப்பவே தோணல்லே சம்பளத்தை அவள் பேருக்கு எழுதிவெச்சோம்னா அவ அந்த வீட்டிலே போய் சாகவேணாம் சம்பளத்தை வாங்கிச் சாப்பிட்டுக்கிட்டு அவ நிம்மதியாயிருப்பா. நம்ப மகனாவது புளைப்பான். திரும்பி வந்தா பார்ப்போமில்லையா? -திரும்பி வாராட்டா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/129&oldid=881468" இலிருந்து மீள்விக்கப்பட்டது