பக்கம்:முல்லை கதைகள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 புது விஷயங்களைக் கிரகிக்க இசக்கியிடம் இருந்த ஆவலுக்கு ஏற்றபடி திண்ணை வாத்தியாரின் அறிவுப் பொக்கிஷம் விசாலமாக இல்லை. அதன் விளைவாக கல்வியரங்கம் மாறியது. > கோனார் மறுபடியும் குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு பாளையங்கோட்டை சாமியார் பள்ளிக்கூடத்திற்குப் பிரயாணமானார், எம்மதத்தவரா னாலும் துறவிகளாக வருகிறவர்களுக்கு நம்மவர் செலுத் தும் மரியாதை சிற்சில இடங்களில் தவறான மதிப்பும் அந்தஸ்தும் கொடுத்து விடுகிறது. இத்துடன் ஒரளவு தர்மச் செலவு செய்யும் சேவையும் சேர்ந்துகொண்டால் அந்தஸ்து வளர்ச்சிக்கு அளவே கிடையாது. ஏகாதிபத்தி யத்திற்கே பிரத்யேகமான வர்ணம் என்ற வெள்ளைத் தோலும் சேர்ந்துகொண்டாலோ கேட்கவேண்டியதே இல்லை. இந்த மூன்று அந்தஸ்தும் கொண்ட பிறமத மிஷனரிப் பள்ளிக்கூடங்கள் தர்மம் செய்யும் ஏகாதிபத்தி யமாக, ஏகாதிபத்தியம் செய்யும் தர்மஸ்தர்பனமாக இரண்டு நோக்கங்களையும் கதம்பமாக்கி இரண்டையும் ஒருங்கே குவைத்து வருகிறது. இப்படிப்பட்ட ஸ்தாபனம் ஒன்றின் ஸ்தல சர்வாதி காரி அர்ச்ஞானானந்தச் சாமியார். இவர் ஸ்தல கிருஸ்து வர்களின் ஒரு வகுப்பாருக்கு மோட்சத்தில் இடம் போட்டுக்கொடுக்கும் வேலையுள்ள ஸ்தல ஹைஸ்கூலின் தலைமை நிர்வாகத்தை ஏற்று இங்கிலீஷ-ம் சரித்திரமும் போதித்து வருகிறார். - இவர் வசம் கோனார் தம் குழந்தையை ஒப்புக் கொடுத்தார். சாமியார் இலவசப் படிப்பும், அவன் வாழ்வுக்கு என்று மாசம் நான்கு ரூபாய் சம்பாவனையும் கொடுப்பதாக வாக்களித்ததில் கோனாருக்கு மகிழ்ச்சி. கங்கு கரையில்லாமல் பிறந்தது. 'பிள்ளையை எப்படியும் நாலெழுத்து வரும்படி செய்விக்கவேண்டும்" எனக் காலில் விழுந்து கும்பிட்டுவிட்டு வீடுவந்து சேர்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/135&oldid=881475" இலிருந்து மீள்விக்கப்பட்டது