பக்கம்:முல்லை கதைகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 எல்லாம் அவளுடைய அப்பன் பூட்டியவை. அவ்வணி களை வாங்க என் மனம் மறுத்தது. கைகள் கூசின. ஆனால் அவள் அவற்றை வற்புறுத்திக் கொடுத்தாள். அவற்றை விற்று இரண்டு காளைகள் வாங்கினேன். சென்ற ஆண்டு வானம் பொய்த்தது. கிணற்றில் தண்ணிர் வற்றிப் போய்விட்டது. என்னால் இயன்ற அளவு சுரண்டிச் சுரண்டிப் பாய்ச்சியும், பயிர்கள் பிழைக்கவில்லை. எல்லாம் கரிந்துபோயின. என் அருமைக் காளைகட்கும் தீவனம் தட்டிற்று. - இந்நிலையில் கருப்பக் கவுண்டர் வந்தார். காட்டுக் குத்தகை கேட்டார். அடுத்தபோகம் விளையட்டும், தரு கிறேன் என்றேன். அவர் இணங்கவில்லை. கடுகடுத்துக் கண்டபடி பேசினார். என் மனைவி மானமுள்ளவள். தன் கழுத்திலிருந்த தாலிச் சரட்டைக்கழட்டி என் கையில் வைத்தாள். அது தங்கச் சரடு.

  • இதை விற்று, இவர் கடனை முதலில் கட்டுங்கள் என்றாள். கடைக்காரச் செட்டி அதனை எடையிட்டு மதித்து இருநூறு ரூபாய்கள் கொடுத்தான் அப்பணத்தை அப்படியே கருப்பகவுண்டனிடம் சேர்ப்பித்தேன்.

பணத்தை எண்ணி எடுத்துக்கொண்டு பாக்கிப்பணம் எங்கே என்றான். பொறுத்துக்கொள்ளுங்கள் விளைந்த வுடன் தருகிறேன் என்றேன். "விளையாவிட்டாலோ' என்று வேட்டு எழுப்பி னான். என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றேன். "யாரடா அங்கே’’ என்று அதட்டினான். அவனு டைய கையாள் ஒருவன் வந்தான். இவன் காளைகளைச் சென்று பிடித்துவா என்று கட்டளையிட்டான். என் காளைகளிரண்டும் பிடித்துவரப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/14&oldid=881480" இலிருந்து மீள்விக்கப்பட்டது