பக்கம்:முல்லை கதைகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 4 எல்லாம் தானாகவும், தன்னில் வேறாகவும் வேறு என்ற பேதமற்றும் இருக்கும். அது தன் தொழிலில், தன் தியதியில், தன் இயற்கைத் தன்மையில் சந்தேகம் கொண்டது. பயம் கொண்டது. தன் தொழிலை தானே நிறுத்த இயலாமல் தவித்தது. தனக்குத் தன் தொழில் தெரியவில்லை எனக் குமைந்தது. சிருஷ்டித் தொழில் கலையின் நியதியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதைக் கண்டது தான் நிலையாமல் தன் பூர்த்தியாகா ஆசைகள் தன் தொழிலில் விழுவது கண்டு தனக்குத் தன் பயிற்சியில்லை, க்லையில்லை அதாவது சிருஷ்டித் தன்மைக்குத் தான் லாயக்கில்லை என நினைத்தது. வருஷம் முழுவதும் பதினெட்டாம் பெருக்காக இருக்க முடியுமா? வெவ்வேறு நிலையில் உள்ள உணர்ச்சி, பிரவாகம்போல ஒன்றையொன்று மோதி பொதுநிலை யடையும் வரை கொந்தளிப்பும் சுழற்சியும் இருக்கும். நிலைமை சமப்பட்டவுடன் வேகம் குறையாது போனா லும் மேலுக்குத் தெரியாமல் இருக்கும். இசக்கிமுத்தின் மனத்துடிப்பு இந்த நிலையை அடைந்ததின் பயனாக அதன் நிதானத்தைத் தப்பிதமாகக் கருதும்படிலெட்சுமிக்கு மனப் பண்பு இருந்ததால், அவனுக்குத் தப்பிதம் செய்து விட்டாள். நிதானப்போக்கை. அசட்டை என்று நினைத் ததின் விளைவாக சந்தர்ப்ப விசேஷத்திற்கிணங்க விபரீதம் விளைந்துவிட்டது. விளைந்ததும் இசக்கிமுத்துக்குத் தெரிந்தது. நாதப்பிசகு ஏற்படாமல் ஒலிக்கும்படி செய்துவந்த அவனது மனவீணையின் நரம்புகள் அறுந்து தொங்கும் படி உணர்ச்சி வாசித்து விளையாடிவிட்டன். உன்மத்தன் ஆனான். பூர்வஜன்மம் என்ற வசதி இருக்கிறதோ மு. க.-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/140&oldid=881481" இலிருந்து மீள்விக்கப்பட்டது