பக்கம்:முல்லை கதைகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 இவை செல்வியின் உள்ளத்தைக் கவர்ந்தன. கவிதைக் குரிய அழகின் கூட்டத்தை அவளால் அளவிட முடிய வில்லை. அவள் பேசுவாள், ஆயினும் ஊமையானாள். செக்கச் செவேலென்று பூத்திருந்த செங்காந்தள் மலர் களையும், அவைகளை அடுத்து உயரத்தில் தொங்கும் பொன்னிறமான சரக்கொன்றை மலர்களையும் தோழி கள் கண்டார்கள். அக்காட்சி இரப்பவர் இல்லை ஒன்று ஏந்திய கைகளில் கொடையாளிகள் பொற்காசுகளைச் சொரிவதாகும்" என்ற கவிதை செய்து கொண்டிருந்தார் கன். அச்சமயம் புள்ளிமான் ஒன்று வேறொரு பக்கத்தில் செல்வியை அழைத்துக்கொண்டு போயிற்று. கதிரவன் மேற்றிசையைத் தழுவும் நேரம் ஒரு பக்கம் பிரிந்துசென்ற செல்வி, சிறிது சோர்வால் அங்கிருந்த பளிங்கு மேடை ஒன்றில் அமர்ந்தாள். அவளுடைய நீலவிழிகள் உலவிய இடத்தில் காதல் விளைக்கும் ஆண் மயிலும் பெண் மயிலும் ஒன்றை ஒன்று கண்ணாற் சுவைத்தபடி இருந்தன. அந்தக் காதல் வெள்ளம் இரண் டிற்கும் நடுவில் ஒரு விரற்கடைத் தூரத்தான் பாக்கி, செல்வி தன் பார்வையைத் திடீரென்று மறுபுறம் திருப்பினாள். அவளுடைய தன்னந் தனிமை'யை அவளுக்கு நினைவை உண்டாக்கின, இணை மயில்கள் அவ்ளுடைய இளமையின் இயற்கை அவளைக் கண்ணிர் விட வைத்தது, அவள் எழுந்தாள், தோழிமாரைத் தேடி நடந்தாள். மற்றொருபுறம் செங்குன்றுரர் இளவரசர் மெரு கேற்றிய கருங்கல்மேடை ஒன்றில் தூங்கிக்கொண்டிருந் தான். ஆயினும் அவனுடைய இளமையும், அழகும், ஒளியும் மாத்திரம் தூங்காமல் தம்மை நாடிவரும் உயிருக்கு மற்றோர் உயிரை அளிக்கக் காத்திருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/145&oldid=881486" இலிருந்து மீள்விக்கப்பட்டது