பக்கம்:முல்லை கதைகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கதைகளைப் படிப்பான் அதைவிட என் விமரிசனங்களைப் படிப்பான் முக்கால் வாசி என் கைச்சரக்கே என் தலை மேல் தூக்கிப்போட்டு உடைக்கப்படும். என்ன இருந்தாலும் புகழல்லவா சார்? யாருக்குத் தான் இழக்க மனசுவரும். வர்ணக் கடிதாசி யொட்டிய ஜப்பான் விளக்கு மாதிரியான சுடாத புகழ் வெளிச்சத்தில் உடம்பைக் கொஞ்சம் காயவைத்துக் கொண்டேன். "......' என்ற பத்திரிகையைக் குறிப்பிட்டு Gur 7 வருஷ மே மாதப் பிரதியைப் பார்த்தியாளா என்றான். எதற்கு' என்றேன். "அதிலே ஒரு ஆழ்ந்த உண்மையிருக்கு; பார்த்தேன். சார் நேற்று இப்படி மூர் மார்க்கெட்டுக்கும் போனேன். இதை அடுக்கி இருந்தான். அட்டைப் பட மெல்லாம் கிழிஞ்சு.ோச்சு: காலணாவுக்கு ரெண்டுன்னான் ஏன் சார் நமக்கு விஷயந்தானே வேணும்; அப்படியே ஒரு ரெண்டனாக்கு ஒரு கத்தை வாங்கினேன். நம்ம வீட்டுக் காரி இருக்காளே, அவளுக்குக் காகிதக் கூடை பண்ணனு மா. - அப்படியே குடுத்துடுங்கன்னு வாதாடினாள். அதிலே ரொம்ப விஷயங்களிருக்கு, படிச்சுட்டுதான் தருவேன் என்றேன்; எப்படிப் பார்த்தாலும் இந்தத் தெ. ந், ரவுதான் சார் . நல்ல கோட் சார்-மூணு வருஷந்தான் வாங்கினது; கை ஒரத்திலேதான் கொஞ்சம் கிளிசல்-அதைக்குடுத்து ஒரு கண்ணாடி ஜாடி வாங்கிப் பிட்டாள் -என்ன பண்ணச் சொல்ரேள்-என்னெ?" என்று ஒரு மூச்சுப் பேசிமுடித்தான். நான் எப்பொழுது ஒயப்போகிறதோ என்று கேட்டுக் கொண்டே இருந்தேன். ஏன் சும்மா ஒரு மாதிரி இருக்கேள்? கொஞ்சம் வெத்திலே போடுங்களேன்' என்று விதேசி டப்பி நாசூக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/22&oldid=881502" இலிருந்து மீள்விக்கப்பட்டது