பக்கம்:முல்லை கதைகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 வெற்றிலைச் செல்லத்தை என்னிடம் நீட்டிவிட்டு, நீங்கள் என்ன நினைக்கிறேள்,- எண்ணெ தேச்சுக் குளிச்சால் 'உடம்புக்கு நல்லதா சார்?' என்றான். 'எனக்கெப்படித் தெரியும்? நான் தேச்சுக்காமே இருந்ததில்லையே' என்றேன். சும்மாத்தான் கேட்டேன். அதிலே போட்டிருக்கான், எண்ணெ தேய்ச்சுண்டாக் கெடுதல்னு கெடுதல் எப்படீன்னா ஜன்னி வந்திடுமாம் பாம்பு ம்ேபு கடிச்சா, விஷத்தோடே ரோஷம் (உக்கிரம்: மெட்ராஸ் வார்த்தை) ரொம்ப ஜாஸ் தியாம். இந்தக் கெடுதல்களெல்லாம் எதற்கு? அவன் ஒரு மருந்து சொல்றான், அதிலே எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை - வெலை ஜாஸ்திஅதுமட்டுமா (காதோடு காதாக)...... சுக ஜன்னி வந்துடு மாம்! இன்னிக்கு ஒரு காரியம் செய்றதுன்னு தீர்மானம் பண்ணிப்புட்டேன். இனிமே எண்ணெயே தேச்சுக்கிரதில் லேன்னு வீட்டிலே ஏக ரகளை, இன்னிக்கி என்ன கிழமை தெரியுமா.-புதன்! ஒரேபாட்டா முடியாதின் னுப் புட்டேன் தலையிலேகூட எண்ணையைக் கொண்டுவந்து வச்சுப்புட்டா; நான் தீரமா உதறித்தள்ளிப்பிட்டு ஆபீஸுக்கு வந்துட்டேன். இன்னும் வீட்டுக்குப் போகல்லே. இப்படியே பீச்சுக்கு வந்துட்டு பூ வாங்கிக்கிண்டு போகலாம்ன்னு வந்தேன். "ஏன் ஒய் உம்மவீட்டு மூலக்கிரகத்துக்கு சமாச் சாரத்தை வெளியில் போட்டு உடைக்கிறீர்?-என்ன சமரசக் கமிட்டி ஏற்படுத்தணுமா என்றேன்." போமையா! உங்களைப் பார்த்ததும், ரொம்ப நாளாச்சே வீட்டுக்கு வாருங்களேன் காபி சாப்பிட்டுப் போகலாம் என்று கூப்பிடலாம்னு வந்தேன்?' என்றான் 4.iாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/23&oldid=881503" இலிருந்து மீள்விக்கப்பட்டது