பக்கம்:முல்லை கதைகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 துச் சொல்ல முடியாது. தொண்டு என்பது ஒர் ஆள் அல்ல. கோபுரம் அல்ல; மிட்டாய்க் கடை அல்ல, உங்களுக்கு வர்ணித்துச் சொல்வதற்கு! நம் நிலையத்தில் சேர்ந்து நீங்கள் ஊழியம் செய்துகொண்டே இருந்தால், போகப்போக உங்களுக்கே அந்த உருவற்ற பொருள் உருவாகும்; அதன் சுவை தெரியும். இவ்வளவுதான் உங்களுக்கு நான் சொல்ல முடியும். அதுவும் இந்த நடுத்தெருவிலே இதைவிட அதிகமாச் சொல்லவே கூடாது' என்கிறார். நான் மறுநாள் அந்த நிலையத்துக்குப் போகிறேன். அதன் தொண்டர்களில் ஒருவனாகச் சேருகிறேன். காரிய தரிசி மிகவும் நல்லவரென்று தெரிகிறது. அவர் எல்லா வேலைகளையும் தாமே கவனிக்கிறார். தமது அறையி: லுள்ள மேஜை நாற்காலிகளைத் தாமே துடைத்து, இடம் மாற்றி வைத்துக்கொள்கிறார். வேலைக்காரர்களை அடிக்கடி கூப்பிட்டுத் தொந்தரவுபடுத்துவதில்லை. ஒவ்வொரு பகுதிக்கும் தாமே நேரில் போய் வேலைகளை ஒழுங்குபடுத்துகிறார். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு தனி அதிகாரி. அவரிடம் எத்தனையோ வேலையாட்கள், காரியதரிசி இந்த அதிகாரிகளிடம் அன்போடு பழகுகிறார் . ஒவ்வொரு வேலையாளையும் தம்பிபோலப் பாவித்து நடத்துகிறார். ஒரு நாளைக்கு நிலையத்துக் கட்டடம் முழுவதையும் குறைந்தது ஐம்பது தடவையாவது அவர் சுற்றி வராமல் இருக்கமாட்டார். தெருக்களில் வேலை யாட்களைத் தனியே சந்தித்தால் அவர்களுடைய நலங் களைக் கேட்பார் அவர்கள் வேலைசெய்யும் பகுதியின் அதிகாரியைப் பற்றித் துருவித் துருவித் தகவல்கள் கேட்பார்; வேலை விவரங்களையும் விசாரித்துத் தெரிந்து கொள்வார். அதிகாரிகளைச் சந்திக்கும்போதும் இப்படித் தான் ஆட்களைப்பற்றிக் கேட் பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/28&oldid=881519" இலிருந்து மீள்விக்கப்பட்டது