பக்கம்:முல்லை கதைகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露岛 வேலையாட்கள் குறித்த நேரத்தில் வேலை செய்வார் கள். அதற்கு முன்பும் பின்பும் எப்போது கூப்பிட்டாலும் வருவார்கள். அவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசக்கூட ஒய்வு இராது. ஒய்வு இருந்தாலும் பேச மாட்டார்கள். அதைவிட, கொஞ்ச நேரம் வெளியே சென்று சுருட்டுக் குடிப்பதோ, காபி அருந்துவதோ அவர்களுக்கு லாபகர மாகத் தோன்றும். நமக்குக் கஷ்டமோ சுகமோ, இன் னொருவனுடைய பங்கு எதற்கு' என்ற மனப் பான்மையே பெரும்பாலும் உடையவர்கள். செத்துப் போனவன்போலப் படுத்திருந்தவனை மோந்து பார்த் துக் கரடி அவனை விட்டுப்போனதாகக் கதையில் தான் படிக்கலாம். இங்கே உயிரே போய் நீட்டிக்கிடந்தாலும் . எந்தக் கரடியும் எட்டிக்கூடப் பார்க்காது. அவன் அவன் வேலை அவன் அவனுக்கு! செடிகளும் மரங்களும் ஒன் றோடு ஒன்று இழைந்து வளருவது இந்த உலகத்துக்குப் புறம்பேதான். இங்கே செடி, மரம், கவிதை - ஏதும் உத வாது. இது கடுமையான வாழ்க்கை; கற்பனைக்கு இங்கே இடம் இல்லை. எவனாவது மற்றொருவனுடன் கொஞ்சம் இழைந்தால், அவனுக்கு இவன் குழி தோண்டு கிறான் என்று அர்த்தம், நான் சொல்லப்போவது உங்க ளுக்கு வேடிக்கையாக இருக்கலாம்; ஆயினும் இது உண்மை. ஒரு நாளைக்கு வேலைகள் அதிகமாக வந்து விட்டன என்று வைத்துக்கொள்ளுங்கள். அன்று பல பேர்களுக்கு அடிக்கடி கக்கூசுக்குப் போகவேண்டிய வேலைகளும் வந்துவிடும். மணிக்கணக்காக அங்கே உட் கார்ந்திருப்பவர்களும் இருப்பார்கள். வேலை செய்வதற் கென்றே சிலர் உண்டு; அவர்கள்தாம் உள்ளே ஓய்வு ஒழிச்சலின்றி மடிவார்கள். அவர்களுக்கு வெளியுலகமே தெரியாது! இந்த நிலையம் தெரியும்; தங்கள் வீட்டைப் பற்றிச் சிறிதளவு தெரியும். ஏன், இந்த நிலையத்திற்கு உள்ளே கூடப் பிற்பகுதிகளைப்பற்றி ஒன்றுமே தெரியாது. இந்த ஆசாமிகள்தாம் கன்னி பப்பனுக்குப் பிரியமானவர் கிள; உயி போன்றவர்கள் இதர்களைப் பின்னும் கசக்கி வேலை வாங்கி அவன் தன் பிரியத்தை வெளியிடுவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/31&oldid=881527" இலிருந்து மீள்விக்கப்பட்டது