பக்கம்:முல்லை கதைகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தினால் அசையும் உடம்பு-அவனைப் பார்த்தால் ஒரு அழகான பொம்மைய்ைப் படுக்கவைத்திருப்பது போலத் தோன்றியது. நான் வருத்தத்துடன் நினைத்தேன்: 'எவ்வளவுதான் நாங்கள்-அதாவது, பனிக்கட்டி போன்ற நிறம் படைத்த அல்லது நிறத்துடன் படைக்கப்பட்ட நாங்கள்எவ்வளவுதான் மேற்கு மோஸ்தருக்குள் உடம்பைத் திணித்துக்கொண்டாலும் அசல் மேற்கத்தியானுக்கு உள்ள கம்பீரமோ, நேர்த்தியோ உண்டாகப் போவ தில்லை. பிறவியுடன் வருபவை அவை; அவைகளை அடைபவர்கள் பாக்கியசாலிகள்! "ஆனால், பிறந்துவிட்டோம் இப்படி, இந்த நிறத் துடன், இந்த நாட்டில். எப்படியாவது வாழ்ந்து முடிக்க வேண்டியதுதான். குறைந்த பட்சம் மேற்கு முறையில் எங்களை உயர்த்திக்கொள்ள முயற்சியாவது செய்ய வேண்டியது பொறுப்பு. கடன்...' நான் உட்காரவேண்டும். முடிந்தால் ஈரவுடை யுடனேயே கொஞ்சம் கைகால்களை நீட்டிக்கொண்டு படுக்கவாவது வேண்டும். அவன்-கண் அயரும் என் மேற்கத்தித் தோழன்-ஒரு பெர்த்தில் தூங்கிக் கொண் டிருந்தான்; கீழுள்ள மற்றொரு பெர்த்தி'லாவது: படுக்கலாமா என்று பார்த்தேன்; அங்கே உடைக்காத, பிராந்தி பாட்டில் ஒன்று, ஒரு காலி பாட்டில், சிகரெட் பெட்டி ஒன்று. ஒரு தீப்பெட்டி, ஒரு வாக்கிங் ஸ்டிக், எல்லாவறறையும்விட பயப்படும்படியாக ஒரு கைத் துப்பாக்கி கிடந்தன. எல்லாவற்றையும் கீழே எடுத்து வைத்து விட்டுப் படுப்பதற்கு எனக்கு உரிமை இல்லை. "ஒருவேளை இந்த கம்பார்ட்மென்ட் முழுவதும் இவன் ரிஸர்வ் செய்திருப்பானோ?' என்று நினைத் தேன். அப்படியாயின் இந்த வண்டியில் ஏறியதே தப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/40&oldid=881547" இலிருந்து மீள்விக்கப்பட்டது