பக்கம்:முல்லை கதைகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 என் தாங்கும் தோழன் விழிப்பில் சாதுவாக இருந்தால் மன்னிப்பு கோரித் தப்பிவிடலாம். அதுவும் அவனுடைய உயர்ந்த பண்பாட்டிற்கு சிஷ்யனாகத் தோற்றம் அளிக் கும் நான் மன்னிப்பு கோரினால் அவன் அளித்துக் கொஞ்சநேரம் பேசவும் செய்யலாம். ஆனால் அவன் சாதுவாக இராமல் முரடனாக இருந்தால் கைத் துப்பாக்கி..... அதைப் பார்த்தேன்; சட்டம் என்றால் சட்டம்தான்' என்று நினைத்து, சொல்லி செய்யும் வெள்ளைக்காரனின் முன் கோபத்திற்குப் பாத்திரம் ஆகிவிட்டால் அவன் என்னை நாயைப்போல் சுட்டுக் கூட தள்ளலாம்..... நான் அதற்காகப் பயந்து விடவில்லை. இன்னும் நான்கு மணி நேரத்திற்கு மேலாகும் ரயில் புனாவை அடைய. அதுவரையில் மேல் பெர்த்"தில் சந்தடி செய்யாமல் படுத்திருக்கலாம் என்று முடிவு கட்டி, மற்றொரு முறை அந்த அழகான வெள்ளைப் பொம் மையைப் பார்த்து பெருமூச்சு விடுத்து, மேலே ஏறி, ஈாவுடலைத் தளர்த்தினேன். ஈர நாய் உதறிக்கொள்வதுபோல் ரயில் இடமும் வலமும் புரண்டு நின்றது. கீழே படுத்துள்ள தோழன் விழித்துக்கொண்டு என்னைப் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக மூக்கைக் கையால் பிடித்துக்கொண்டு மூச்சை வெளியில் விட்டேன். வீண் கலாட்டா எதற்கு, அதுவும் ஒரு வெள்ளைக்காரனுடன் என்பதுதான் என் அடக்கத்திற்குக் காரணம்; பயம் அல்ல, இல்லவே இல்லை. கீழே ஜன்னலிலிருந்து யாரோ கூப்பிட்டார்கள் 'ஜான்!' படுத்திருந்தவன் பதில் அளித்தான்: "ஒ, இருக் கிறேன்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/41&oldid=881549" இலிருந்து மீள்விக்கப்பட்டது