பக்கம்:முல்லை கதைகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 க்கு உழைப்பு, அப்பாட, பையனின் காலேஜ் படிப்பு முடிந்துவிட்டது. போர்டை வீட்டில் மாட்டிவிட்டு, நாலுகைச் சட்டை போட்டுக்கொண்டு கோர்ட்டுக்குப் போகிறான். பிறகு... கல்யாணம்!... கண் குளிர்ந்துவிடும். கோமதிக்குத் தலைநரைத்துவிட்டது. நான்மாத்திரம் என்ன! உழைத்து உழைத்துத் தேய்ந்த ஒடுதான். பரவாயில்லை. இனி நெஞ்சு வேகும். கொள்ளி வைக்கப் பையன் இருக்கிறான். வசை இல்லை, பேர் சொல்லப் பிள்ளை இருக்கிறான். நெஞ்சு வேகத்தான் வேகும்... எல்லாவற்றுக்கும் இப்பொழுதே உழைக்கவேண்டும், உழைக்காமல் முடியாது. அதெப்படி முடியும்?... 孪 黎 廖 "பதினைந்துக்குக் கீழே ஒரு லக்கம் சொல்லுங்கள்' என்று கேட்டான் கணித சோதிடம் கல்பானந்த யோகி. லோகல் பண்டு சத்திரத்தில் அடுத்த அறை தான் அவனுடைய ஆசிரமம். பதிநாலு என்று பதில் சொன்னார் பிள்ளை. யோகியின் முகம் ம ல ர் ந் த து பூ ஒன்று சொல்லுங்கள்’ 'தும்பைப் பூ" யோகி கண்ணை மூடிக்கொண்டு கணிக்க ஆரம்பித் தான் உட்குழிந்த அவன் கண்கள் மறைந்து மறுபடியும் தோன்றின். 'மூன்று நாள் ஆயிற்று, உங்களுக்கு யோககாலம் ஆரம்பித்துவிட்டது. இனி மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் புத்திரனால் அதி பிராபல்யம். அதற்குப் பொறுப்பு இருக்கிறது. உழைத்தால் பலனுண்டு லக்னாதிபதி, வீ ட் டி ல் உச்சத்துக்கு வருகிறான் புத்திரனுக்கு விசேஷ யோகம் சம்பவிக்கும். கல்பனை முற்றிற்று' என்று கையைத் தட்டினான் கல்பானந்த யோகி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/55&oldid=881579" இலிருந்து மீள்விக்கப்பட்டது