பக்கம்:முல்லை கதைகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 வழியிலே திரட்டி யாருக்குச் சேத்து வைக்கணும்? வேறே. ஆள் பாரு தம்பி என்று பேச்சை முடித்துவிட்டார். இது நடந்த சமயம், அவருடைய மனத்தில் நிறைந்திருந்த விரக்தி வைராக்யம் எல்லாம் இப்பொழுது கழன்று சத்திர்த்துக் குப்பைத் தொட்டியில் விழுந்து விட்டன. இப்பொழுது ஆவுடை நாயகத்தை மறுபடியும் பிடரியைப் பிடித் துத் தள்ளிக் கொண்டு வந்திருப்பது. சத்திரத்து: யோகி தெரிவித்த் யோகசக்கரம்தான் என்று எண்ணினார். பிள்ளை பிறந்த மறுநாளே, புத்திரன் தகப்பனை லகrாதிபதி ஆக்கப் போகிறானோ என்னவோ யார் கண்ட்து பிள்ளைவாளுக்கு உச்சியிலிருந்து உள்ளங்கால் ரத்தம் சிவீரென்று துள்ளி அடங்கியது. "அதெல்லாம் இருக்கட்டும் , தம்பீ...சரக்கு எங்கே இருக்கு, கையிலே என்ன வேணும்-இதெல்லாம் தெரிவிக் காமல் ...... மொட்டையாச் சொன்னே அன்னைக்கு? விவரத் தெரிஞ்சாத்தானே எதிலியும் இறங்கலாம்?" மீன் தூண்டிலை நாடுகிறது என்று தட்டுப்பட்டதும், ஆவுடை நாயகம் சுருட்டை வீசிவிட்டு சவுக்க' உட்கார்ந்தான் . சரக்குக்கு மேற்படி பேத்துமாத்துக்கு எல்லாம் நானாச்சு. இன்னைக்கு என்ன. திங்களா? அடுத்த திங்கக் கிளமை, இவ்வளவு நேரம் கணக்கு பைசல். ஒரு ஈங்குரு விக்குத் தெரியாது...உங்க கையிலே எவ்வவு இருக்கு? எம்புட்டு பெரட்டணும்னு மாத்திரம் சொல்லுங்க" பிள்ளை குரலைத் தனித்துக்கொண்டு சொன்னார்: "சரக்கைக் கண்ணாலே பார்க்காம, தொகையை எண்ணி வைக்க முடியாது. ராவோடு ராவா கீழக்குறிச்சி அய்யர் கிட்டங்கியில் கொண்டு சேர்க்கிற பொறுப்பை நம்மாலே ஏத்துக்கிட முடியாது. டிபார்ட்மெண்டுலே கண்ணிலே எண்ணெய் ஊத்திகிட்டு முழிப்பா இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/57&oldid=881583" இலிருந்து மீள்விக்கப்பட்டது