பக்கம்:முல்லை கதைகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மார்க்கட் நபர்களைக் கையும் களவுமாய்க் கண்டு பிடிப்ப பதில் உதவிசெய்ததற்காக சொந்த ஹோதாவில் மிகுந்த நன்றி தெரிவித்திருந்தார். அதோடு கவர்ண்மெண்ட் வெகுமதிக்கும் சிபாரிசு செய்திருப்பதாகக் கண்டிருந்தது. கடிதத்தைக் கிழித்துக் குப்பைத்தொட்டியில் போட் டார் பிள்ளை. அடுத்த கடிதத்தை உடைத்தார். அதை எழுதியது பிள்ளையின் மூத்த மகள். பதினாறு விசேடம் கழிந்ததும் தம்பியைத் தானே எடுத்துக்கொண்டு வளர்க்கத் தீர்மானித்திருப்பதாகவும், அதனால் அவர் தன்னோடு வந்து வீட்டில் இருக்க வேண்டுமென்றும், தன் மாப்பிள்ளையும் இது விஷயத்தில் மிகுந்த கவலையோடு இருப்பதாகவும் எழுதியிருந்தாள். அதோடு தங்கச்சி சிறியவள் என்பதனால், அவள் பேச் சைக் கேட்டு தம்பியை அவள் வளர்க்கும்படி விடலாகா தென்றும் எழுதியிருந்தாள். கடைசியாக, தம்பி குமார ஸ்வாமிக்கு இப்பொழுது புட்டிப்பால் கரைத்துக் கொடுத்து வருவதாகவும், திருநெல்வேலியிலிருந்து நாலைந்து பால் புட்டிகள் கட்டாயம் வாங்கிக்கொண்டு வரவேண்டுமென்றும் சொல்லி முடித்திருந்தாள். பிள்ளை கடிதத்தை முழுவதும் படித்து நிமிர்ந்தார் அவர் நெஞ்சில் ஒடிய பூதாகாரமான இயந்திரச் சுழற்சி ஒரு வலிப்பு வலித்துக் குரூரமாகச் சத்தமிட்டு வேகத்தை நிறுத்தியது. அது இரைந்துகொண்டிருந்த கட்டிடம் நொறுங்கிக் குமைந்தது. என்றாலும் இத்தனை நாள் ஒடியதால் வந்த வேகத்தில், சக்கரம் தலைகிறங்கிச் சுழன்றுகொண்டிருந்தது. பையில் சில்லறையை எண்ணிப் பார்த்தார். சரியாக ஆறணா இருந்தது. இங்கிருந்து பஸ் ஸ்டாண்டுக்கு ஒரனா. அங்கிருந்து மாராந்தை அஞ்சனா இதைச் செல வழித்துக்கொண்டு போக்ப்போகிறது எங்கு வீடா அது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/68&oldid=881607" இலிருந்து மீள்விக்கப்பட்டது