பக்கம்:முல்லை கதைகள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரஹணம்


ரகுநாதன்


:பூமி- சூரியன் - சந்திரன்

தாய்- தந்தை-குழந்தை
பக்கிரிசாமி ஒரு கொத்தனார்,
மாப்பத்தி அவர் சம்சாரம்.
இசக்கியம்மா ௸ இருவருக்கும் பிள்ளை,
ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண்.


அன்று விடியற்காலையில் பாப்பாத்தி படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது முகத்தில் அருளே இல்லை. இரவு எப்படியும் வந்து விடுவார் என்ற நம்பிக்கையோடு, மாலையில் வெளுத்த புடவைகூடக் கட்டிக் கொண்டாள், அன்றைய மஞ்சள் குளிப்பு வீணாகாது என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அவர் வரவில்லை, ஏற்கெனவே தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த அவளுடைய வீரகதாபத்துக்கு, மூட்டைப் பூச்சியும், : சீகாரைப்பாயின் சிலும்பல்களும் தூபமிட்டன. அவருக்கு என்று பிழிந்து எடுத்து வைத்திருந்த வெந்நீர்ப் பழையதில், புழக்கடைக் கொசுக்கள் தான் செத்துக் கிடந்தன:


பழையதை எடுத்துக் கழனிப் பானையில் கொட்டி விட்டு "இந்த வேலையை இவுக விட்டுத்தொலைச்சாலும் தேவலெ.. இருந்தாலும் இப்படியா பள்ளி...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/70&oldid=1414914" இலிருந்து மீள்விக்கப்பட்டது