பக்கம்:முல்லை கதைகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

es இல்லாமே. இந்த இசக்கி மூதி எங்கே போய்த் தொலைஞ் சிதோ. மூதிக்கு எந்திரிச்சவுடனேயே விளையாட்டுத் தானோ?' என்று முனகிவிட்டு, அடுப்பில் தோசைக் கல்லைப் போட்டான். முத்திய நாள் மிஞ்சிப்போன தோசைமாவின் புளிப்பை மாற்றுவதற்காக, சோடா உப்பைத் தேடி, பரணில் துழாவினாள். எப்படியும் காலையில் அவர் வந்துவிடுவார் என்று அவளுக்குத் தெரியும். கோடா உப்பைத்தோகையில் கலந்து பிசைந்து விட்டு, கல் காய்ந்துவிட்டா என்று நீர் தெளிக்கப் போனான். அதற்குள், "இந்தன. நான் புழயபடியும் போவனும் இப்பவே சோத்தை வடிச்சிரு' என்று குரல் அடுப்புங் கரைச் சுவரில் மோதி பாப்பாத்தி காதில் விழுந்தது. காய்ந்த கல்லில் தண்ணிர் சுரீர் என்றது. பாப்பாத்தி நிமிர்ந்தாள். பதில் சொல்லாமல், தோசைக்கல்லை எடுத் .சுவரில் சாய்த்தாள்.' களைத்துப் போய் வந்திருந்த பக்கிரிசாமி கையில் கொண்டுவந்த போசன பாத்திரத்தையும், தச்சுமுழம், கொத்துக் கரண்டி, ரஸ்மட்டம் முதலிய கருவிகளையும் பரணில் லுைத்து விட்டு, கிணற்றங்கரை பக்கம் போனார். போகும்போது பாப்பாத்தியைப் பார்த்தார்; அவள் பார்வை விறைத்திருந்தது. நேற்று இரவு வராததுதான் இதற்குக் காரணம் என்பதை உணர்ந்து கொள்ள முடியாத அவ்வளவு நபுஞ்சகன் அல்ல, பக்கிரி. எல்லாம் இருட்டுகிற, ஆரைக் குத்தான் என்று அறிந்தவர். சிரித்துக்கொண்டே, கிணற் றில் பட்டையைப் போட்டார். "செல்லாயி நயம் சரக்கு, தான் சரியான நாட்டுக் கட்டை' என்று எண்ணியவர் முந்திய இரவு அடிவானந் தோண்டிய பள்ளத்தில் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் நடத்து கொண்ட திரு விளையாடலை நினைத்தார். அவருக்கே சிரிப்புப் பொங்கி பது உடலில் இன்பம் கிளுகிளுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/71&oldid=881615" இலிருந்து மீள்விக்கப்பட்டது