பக்கம்:முல்லை கதைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 குளித்துவிட்டு வந்தவர் அடுப்பங்கரையைப் பார்த்து, "இசக்கியை எங்கே? கடைக்கி கிடைக்கிப் போயிருக் குதா?' என்று கேட்டார். பதில் இல்லை; வெறும் தூண்டில்தான் வந்தது. மீன் சிக்கவில்லை. சிரிப்பு அவருக்கு உடன் பிறந்தது. சிரித்தார். கூடத் துக்கு நடந்தார். கூடத்துக்கு வந்தபோது, தெருவிலிருந்து பெண் இசக்கியம்மா-எட்டு வயதுச் சிறுமி-சிணுங்கிக் கொண்டே ஓடிவந்தாள். திண்ணையில் துண்டைப் போட்ட கொத்தனார், 'ஏ புள்ளே! ஏன் அளுதுக்கிட்டே வாரே என்று: கேட்டார். அந்தப் பிள்ளையோ பதில் சொல்லாமல் நேரே, அடுக்களைக்குப் போயிற்று. பாப்பாத்திக்கோ பக்கிரிமீதுள்ள கோ ப த் ைத. யார்மீது காட்டலாம் என்ற துடிப்பு. இசக்கியம்மா வரவும், 'ஏ அளுகுணி முதி. ஏன் கண்ணைக் கசக்குதே?’’ என்று கேட்டாள். - முதலில் வெறும் சிணுங்கல்தான்;பதில். சிணுங்கலோடு சிணுங்கலாய். இங்கெ பாரு அம்மா எதிர்த்த வீட்டுச் சுடலை என்னெப் பார்த்து, கெட்டவார்த்தை செய்யக் கூப்பிடுதாம்மா' என்ற வார்த்தைகள் பிறந்தன. இந்த அதீதமான புகார் பாப்பாத்தி மனதில் அந்த வேளையில் என்னவோ போலத் தைத்தது. முதி முதி. அந்தப் பயலோ டெ சேரா தென்னு உனக்கு எத்தனை தரம் மாரடிக்கது?' என்று கத்திக் கொண்டே, முதுகில் ஒரு அறை வைத்தாள். இசக்கி கதறினாள். அடிகள் தொடர்ந்தன. வெளித் திண்ணையிலிருந்த பக்கிரிசாமி இத்தனையும் கேட்டுக் கொண்டுதா னிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/72&oldid=881617" இலிருந்து மீள்விக்கப்பட்டது