பக்கம்:முல்லை கதைகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 1 'இந்தா பாரு புள்ளெயை ஏன் போட்டு அடிக்கிறே. அதட்டின்ால் போறாதா?’ என்று மீண்டும் தூண்டிலை எட்டி வீசினார். மீண்டும் தோல்விதான். - பாப்பாத்தியம்மா அ டி. ப் ட ைத நிறுத்திவிட்டு "பெத்துப் போட்ட அப்பனுக்கே விதரனை இல்லெ. இவளை அடிச்சித்தான் என்ன ஆவுது' என்று சலித் துக் கொண்டே, பக்கிரியை முதுகில் குத்தினாள். கொத்தனார்வாளுக்கு தன்னைத் தன் சம்சாரம் குத்தாமல் குத்துவதைத் தாங்க முடியவில்லை இந்தா , வந்தவுடனேயே சண்டைக்கி வரிஞ்சி கட்டியே' என்றார். பின்னே என்னா? நான் ஒருத்தி இருக்கேனே என்ற லட்சை கூட இல்லாமெ-' என்று இ முழ த் த | ள் பாப்பாத்தி. 'நீ இருக்கது தெரியாமலா இருக்கு தொலைஞ்சா போயிட்டெ?” என்று எதிர்த்துத் தம்மைச் சமாளிக்க முயன்றார். ஆனால் வார்த்தைகள் தம்முள் விக்கின. தொலைஞ்சி போனாத்தான் அலுப்பு விட்டதே. என்று கத்திவிட்டு, 'ஏம் மூதி, இன்னம் ஏன் அழுது க் கிட்டிருக்கே’’ என்று பக்கத்தில் நின்ற இசக்கியை அடிக்க ஆரம்பித்தாள். "இந்தா பாரு புள்ளெயை அடிக்காதே' என்று ஆணையிட்டார் ஆண் சிங்கம் , "ஐயோ! பொண்டாட்டி புள்ளெமேலே எவ்வள வு கர்சனை!" என்று சிலுப்பிக் கொண்டே தாக்கினாள், பாப்பாத்தி. தன்மீதுள்ள கோபம் முழுவதையும் அந்த அப்பாவிக் குழந்தை மீது செலுத்துவதை அவரால் தாங்க முடிய வில்லை .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/73&oldid=881619" இலிருந்து மீள்விக்கப்பட்டது