பக்கம்:முல்லை கதைகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 செங்கல் சுண்ணம்பு சுமக்க வரும் ......... சிறுமிகளோடு முறை செப்பி விளையாடும் உரிமையும் அவருக்கு உண்டு. ரவிக்கை அணியாத நாட்டுக் கட்டைகள் முந்தானைச் சேலையைச் சுருட்டி, தலையில் மணையாக வைத்துக் கொண்டு, செங்கல் கூடைகளைச் சுமந்து வரும்போது, அவர் தயிர்க்கலையம் கொண்டு வரும் கோபியரைக் கண்ட பரமாத்மாவே ஆய்விடுவார். அவர்களுடைய திமிறிய உடல் கட்டையும் அங்க அசைவுகளையும் பார்த்துக்கொண்டே, வேலை செய்தால், அரண்டி தன்னையறியாமலே விறுவிறுப்புக் காட்டும். கன்னிகழி யாச் சிறுமியரிடம் கைச்சரசமாடுவதிலிருந்து, விக்குக்கு விட்ட விரைச் சுரையான வத்தல் தார்வரை கைவைத்து அனுபோகவகை கண்டவர், எனின இருந்தாலும் வருமா?' பாப்பாத்தி சிவெப்பா மட்டும் இருந்தா போதுமா?’ என்று அடித்துப் பேசும் திறமையுடையவர். எனினும் பாப்பாத்தியை ஊரறிய கைபிடித்த நாளை பிலிருந்து அவளிடம் கசப்பைச் சம்பாதித்துக் கொண்டவ ரல்லர் இடையிடையே சிறுபூசல் வரத்தான் செய்யும். ஆனால் அதற்குரிய ஆயுசுகாலம் அவருக்குத் தெரியும். பக்கிரியின் நடவடிக்கையைப்பற்றி பாப்பாத்திக்கு மனசில் வெறுப்பு இருந்தாலும், பக்கிரியிடம் வெறுப்பு கிடையாது மனைவியைதாஜா பண்ணுவதில் கைக்காரன். பாப்பாத்தி இதை வேறுவிதமாக நினைக்கமாட்டாள். இருவருக்கும் அத்தனை பிணைப்பு, அவ்வப்போது வரும் மூன்றே முக்கால் நாழிகைப் பூசல்களெல்லாம் எங்கு, எப்போது, எப்படித் தீரும் என்று நன்றாக அறிக்கவர். பாப்பாத்தியும் அப்படித்தான். புருஷனும் தானும் வீஞ்சிக்கொண்டால்கூட, உள்ளத்திலுள்ள அன்பு குறை யாது. புருஷன் வீட்டோடு இருந்தால், ஆட்டுக்கறி வாங்கி வைப்பதிலெல்லாம் குறைச்சல் கிடையாது. பக்கத்து வீட்டுக்காரி, "நேத்து இப்படி முறைச்சிக்கிட்டு மு. க.-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/75&oldid=881623" இலிருந்து மீள்விக்கப்பட்டது