பக்கம்:முல்லை கதைகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 வீட்டுக்குள் வந்ததும் துண்டை உதறித் திண்ணையில் போட்டுவிட்டு, பரணில் தச்சுமுழம், ரஸ்மட்ட வகை யறாக்களை வைத்துவிட்டு, ஒன்றும் பேசாமல், கிணற்றடிக்குப் போனார். கால்கழுவிவிட்டு வீட்டுக்குள் வந்தார். பாப்பாத்தியிடம் நேரடியாகப் பேச, நாக்கு வளையவில்லை. "ஏ., இசக்கி, சோறாக்கியிருந்தா போடச் சொல்லேன்.' என்று கார்வார் பண்ணிவிட்டு, வெளித்திண்ணையில் வந்து உட்கார்ந்தார். கொஞ்ச நேரம் கழித்து போட்டாச்சின்னு சொல்லு மூதி' என்று இசக்கியை, பாப்பாத்தி கார்வார் பண்ணுவது பக்கிரிசாமி காதில் விழுந்தது. பாவம் அந்த அப்பாவி இசக்கியை இழுத்தடிப்பதைவிட, தானே நேரில் போவது நல்லது என்று தடுக்கவில்லை. போய் இலையின் முன் உட்கார்த்தார். வெறும் வெந்தயக் குழம்பும், காணத் துகையலுந்தான். சாப்பாடு ருசிக்கவில்லை. "காலையிலெகூடச் சாப்பிடல்லென்னு தெரியுமே. வேறெ ஏதாச்சும் வச்சா என்னவாம்?' என்று இலையைப் பார்த்து முறைத்துக் கேட்டார். காலையில் வாங்கிய அடியை மறக்காத இசக்கியும் பக்கத்திலிருந்து அப்பாவையும் அம்மாவையும் திருகத்திருக விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். தான் கேட்டதற்குப் பதில் வராததால் பக்கிரி சலித்து விடவில்லை. இலையைவிட்டு எழுந்திருக்கும்போது, அடேயப்பா இன்னம் கோ. ப ம் ஆறினாப்பிலெ தெரியலியே, இன்னும் எத்தினி நேரத்துக்காம்' என்று சிரித்துக் கொண்டே கேட்டார். பாப்பாத்திக்கு களு க் கென் று சிரிப்பு வந்தது. பல்லைக்கடித்துக் கொண்டாள். கையைக் கழுவி முடிந்ததும், பக்கிரிசாமிக் கொத்தனார்வாள் திண்ணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/77&oldid=881627" இலிருந்து மீள்விக்கப்பட்டது