பக்கம்:முல்லை கதைகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 யில் வந்து படுத்துக் கொண்டார். ஆனால், துரக்கம் வரவில்லை. உள்ளே என்னென்ன நடக்கிறது என்பதை யெல்லாம் காதாலேயே உணர்ந்து கொண்டார். படுக்கை விரித்த சப்தம். இசக்கியை உறக்க மாட்டிய சப்தம், அலுத்துப் போய் உடம்பை முறித்துப் புரண்டு படுக்கும் சப்தம், இடையிடையே பாப்பாத்தி தூக்கத்தில் ழவில்லை என்பதற்கு அறிகுறியான பெருமூச்சுக்கள். பக்கிரிக்குச் சிரிப்பு வந்தது, புரண்டு படுத்தார். 橡 攀 事 பூமி - சந்திரன் - சூரியன் கிரஹணம் இன்னும் விடவில்லை 霹 載 鷲 எப்போதடா உள்ளே போவது என்றிருந்த பக்கிரிக்கு திடீரென்று சிலுசிலுத்த சாரல், காலத்தால் செய்த நன்றியாகத் தென்பட்டது. உடனே உதறியடித்து எழுந்திருந்து துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வீட்டுக்குள் நடந்தார். போகும்போது, வெளியே படுக்கலாமின்னா மழை வேறே தூறுது' என்று விட்டுக்கொடுக்காமல் வாய்விட்டுக் கூறிவிட்டு, பாப்பாத்தி படுத்திருந்த இடத்தைப் பார்த்தார். கலைந்து கிடந்த கூந்தல் தலைக்கு ஹிதம் கொடுக்க ஒருச்சாய்த்துக் கிடந்தாள் பாப்பாத்தி. பக்கத்தில் இசக்கி இதழ்க் கோணத்தில் உறைந்துபோன முறுவலோடு துரங்கிக் கொண்டிருந்தாள். கொத்தனார்வாள் தமக்குத்தாமே சி ரி த் து க் கொண்டார். இசக்கியம்மாளுக்கு அடுத்துப் பாயை விரித்துத் தலையைச் சாய்த்தார். இவர் படுத்ததும், பாப்பாத்தி எதிர்த்திசையில் முதுகு காட்டித் திரும்பிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/78&oldid=881629" இலிருந்து மீள்விக்கப்பட்டது