பக்கம்:முல்லை கதைகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. வீட்டுக்குள் நுழைந்தவுடன், 'இந்தா பாப்பாத்தி, கால் சேர் கறி வாங்கியாந்தேன். எடுத்துட்டுப்போ' என்று செல்லமாய் அழைத்தார். - "இதை எதுக்குப்போட்டு வாங்கியாந்திய. நான் தான் எசக்கியைவிட்டு மீன் வாங்கி வச்சிறுக்கேனே" என்று பதிலளித்தாள் பாப்பாத்தி. - அதுக்கென்ன? ரெண்டையும் வய்யி' என்று சொன் னார் பக்கிரி. - "அப்பாவும் அம்மாவும் இப்படி நேற்று சண்டை யிட்டுவிட்டு, ராத்திரி கெட்ட வார்த்தை செய்து விட்டு, இப்போது சிரிக்கிறார்களே, ஏன்? என்று யோசித்தாள். இசக்கி, கெட்ட வார்த்தை! "அப்போ-சுடலை சொன்னது? அம்மாவும் அப்பாவுமே-அப்போ நான்-' பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த இசக் கி. எதையோ தீர்மானித்து முடிவு கட்டியதுபோல், எதிர்த்த வீட்டுச் சுடலையைத் தேடி ஓடினாள். . "ஏ மூதேவி எங்கே ஒடுதே' என்று கேட்டாள், பாப்பாத்தி. - "அது எங்கெயும் போவுது நீ இப்படி வா' என்று கையை நீட்டினார் பக்கிரிசாமி. 寧 维 黎 மீண்டும், பூமி - சூரியன் - சந்திரன் தாய் - தந்தை - குழந்தை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/82&oldid=881639" இலிருந்து மீள்விக்கப்பட்டது