பக்கம்:முல்லை கதைகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 இந்த ஊரில் இருப்பது எனக்குத் தெரியாது. குழந்தை மல்லிகா உன்னைப்போலவே இருப்பதால் அவளைப் பார்த்தது முதல் உன் நினைவாகவே இருந்தது. ஒருசமயம் உன் மகளாயிருந்தால் உன்னைப் பார்க்கலாம் என்ற சபலத்துடன் தான் இங்கே வந்தேன்... அம்மா... எவ்வளவு நாளாகிவிட்டது. அந்தக் காலம் மீண்டும் வருமா?' என்று பெருமூச்சு விட்டாள். 'நீ ஏன் இப்படி....?' என்று எப்படி விஷயத்தை ஆரம்பிப்பது என்று தெரியாமல் மழுமாறினேன். “...?... 'உடல் வாடி...மெலிந்து...இன்னும் கல்யாணம்...?' "பெண்ணாய்ப் பிறந்தால் கல்யாணம் செய்து கொண்டால் தான்...' "வாழ்க்கை பூரணமாகும். பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் அப்படியே! நானறிந்தரூபி பெளத்த பிrாணி யல்லவே!" என்று மெல்ல சிரித்தேன். 'நீ சொல்லும் வாழ்க்கை வெறும் காணல் நீராக இருந்தால்...?' 'கானல் நீரா? அது கற்பகக் கா. அமுத ஊற்று...' "...கசந்துவிட்டதே என் அனுபவத்தில்." 'கசந்தது வாழ்க்கையல்ல! உன் மனசின் மருட்சி உடலோ மனமோ பேதலித்தால் பாலும் கசப்பது இயல்பு தானே! வாய் கசத்தால் அது பாலின் குற்றமா?" ': அழகிய பிணத்தை மலர்க்குவை கொண்டு மூடி வைத்தாலும் மறைத்துவிட முடியாது. மனித இயல்பும் அப்படித்தான்!' - "அப்படியானால்...நீ...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/85&oldid=881645" இலிருந்து மீள்விக்கப்பட்டது