பக்கம்:முல்லை கதைகள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 "நானா பேடி? தங்களைப்போல் களத்தைவிட்டு ஒடிவந்து, பாசறையில் பதுங்கிக் கிடக்கவில்லையே' என்றான் நிதானங் குலையாத குரலில். அர்ஜுனனின் பதில் தருமனின் மனநிலையைக் காலை வாரிவிட்டது: "கர்ணனும் உன்னைப்போல் வில்லைத் தானே ஏந்துகிறான். பெண் வேட்டைக்காரனுக்குப் போர் முறை என்ன தெரியும்?" . . . "அண்ணா! கரும்புக்கு அர்ஜுனன் பணிந்து விடுவான். ஆனால், கர்ணன் கைவில்லுக்கு அர்ஜூனனும் பணியமாட்டான், காண்டிபமும் பணியாது!" என்று. கத்தினான் அர்ஜுனன். - 'போடா, உன் காண்டிபமும், நீயும். அன்று துரியோதனன் சபையில் தனுவுண்டு காண்டீபம் அதன் பேர்!’ என்று சொல்ல மட்டும் தெரிந்ததா? ஆண்மையற்ற வனே!' என்று எதிர்த்தான் அண்ணன். "ஆம். அன்று பாஞ்சாலியைத் துகிலுரியும்போது கைகட்டிப் பார்த்துக்கொண்டிருந்தீர்களே. இ ன் று கர்ணனுடைய அம்புக்கு அஞ்சி, பாசறையில் வந்து பதுங்கிக் கிடக்கிறீர்களே உங்களுடைய தருமந்தான் இன்று எங்களைத் தட்டழிய விட்டிருக்கிறதே. இவை போதாதா? - "திரெளபதியைப் பற்றிக் கிளறாதே அவள் என் மனைவி-நம் மனைவி' "கட்டிய மனைவியைக் காப்பாற்ற முடியாதவருக்கு மனைவி வேறா?" 'அர்ஜுனா!' என்று முகத்தை நெரித்தான் தருமன். அர்ஜுனன் ஏறிட்டுப் பார்த்தான். அர்ஜுனன் கை தன்னையுமறியாமல் காண்டீபத்தை இறு க ப் பற்றியது. பழைய நின்ைப்பில் நெஞ்சம் தயங்கியது: பதில் வரவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/93&oldid=881663" இலிருந்து மீள்விக்கப்பட்டது