பக்கம்:முல்லை கதைகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 "ஏனம்மா, அர்ஜுன ராஜா ஜெயித்துவிட்டார். கர்ணன் இறந்து பட்டார்!" என்று கூறினாள் அவள். மனசில் விழுந்திருந்த முடிவிற்கு மாற்றமுறைக்கக் கேட்டதும், என்னால் தாங்க முடியவில்லை. கர்ணன் இறந்து போனார். அர்ஜுனன் இறக்கவில்லை. எனினும் குந்திதேவி 'மகனே! என்று ஒடியதன் அர்த்தம்? ஒருவேளை இருவருமே... . "இருவருமே என்ற உணர்ச்சி மனசில் பட்டதும் தலைதெறித்துச் சிதறுவதுபோலிருந்தது. களத்துக்கு வைத்த கால்கள் குளிர்ந்து விட்டன மயக்கம் போட்டு விழுந்து விடுவேனோ என்ற பயம் நெஞ்சை வளைத்தது. அப்படியே அரண்மனைக்குள் ஒடிவந்து படுக்கையில் விழுந்தேன். விழுந்த வேகத்தில் நெஞ்சு திறந்துகெண்டதுபோல் இருந்தது. அழுவதைத் தடுக்க முடியவில்லை. அழுதேன். யாருக்காக, எதற்காக எனபதையெல்லாம் உணர மனசில் தெளிவு இல்லை கர்ணனின் மரணச் செய்தி மனசை ஊமையடியாய் அடித்துக் கிடத்திவிட்டது. அடி விழுந்த மனசில் நினைத்து நினைத்து எழும் வேதனை யுணர்வில் பழைய கனவு நினைவுகள் வடிவாகித் தேய்ந்து கரைந்து உருமாறிக் கொண்டிருந்தன. பூர்வ நினைவுகளை மறந்து விடும் பாக்கியம் பெற்றுவிட்டால், இன்று சிந்தனை முடுக்கில் சுற்றிச் சுழலும் சூத்திரப் பாவையாயிருக்க வேண்டியிராதே... x * இளமையில் அப்பா என்னிடம் வரும்போதெல்லாம் அர்ஜுனனைப் பற்றியே வருணித்துக்கொண்டிருப்பார் . எனக்கு வயசு வரும் முன்னமே, அப்பா என்னிடம் , 'கிருஷ்ணை, நீ யாரைக் கலியாணம் செய்துகொள்ளப் போகிறாய், தெரியுமா? அர்ஜுனனைத்தான். அவனுக் கென்றே உன்னை நான் வளர்த்து வருகிறேன்' என்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/99&oldid=881674" இலிருந்து மீள்விக்கப்பட்டது